லால்குடி, ஜூலை 17 திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை இலால்குடி, பெரியார் திருமண மாளிகையில் 15.07.2023 அன்று நடைபெற்றது.
தலைமையும்; முன்னிலையும்!
இலால்குடி நகர இளைஞரணி தலைவர் அ.ஸ்டான்லி வரவேற்புரையாற்றினார். மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் தே.வால்டேர் தலைமை வகித்தார். மாவட்ட ப.க.செயலாளர் கோ.பாலசுப்ரமணியன், மாவட்டச் செயலாளர் ஆ.அங்கமுத்து, காப்பாளர் பி.என்.ஆர். அரங்கநாயகி, பொதுக்குழு உறுப்பினர் ந.தருமராஜ், மாவட்டத் துணைத் தலைவர் அ.அட்டலிங்கம், இளைஞரணி பொறுப்பாளர் வீ.அன்புராஜா, மாவட்ட மகளிரணி தலைவர் வா.குழந்தைதெரசா, மாவட்டத் துணைச் செயலாளர் வெ.சித்தார்த்தன், மாவட்ட இளை ஞரணி செயலாளர் சு.பனிமலர்செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வான்முடிவள்ளல், மாவட்ட இளைஞரணி தலைவர் க.ஆசைத்தம்பி, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மு.செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைப்பும்; வகுப்பும்!
தலைமைக் கழக அமைப்பாளர் ப.ஆல்பர்ட் தொடக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து கடவுள் மறுப்புத் தத்துவ விளக்கம் எனும் தலைப்பில் முனைவர் க.அன்பழகன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் சாதனைகள் எனும் தலைப்பில் முனைவர் துரை.சந்திரசேகரன், சமூக ஊடகங்களில் நமது பங்கு என்னும் தலைப்பில் மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம், தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும் எனும் தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன், சமூக நீதி வரலாறு எனும் தலைப்பில் வழக்குரைஞர் பூவை.புலிகேசி, தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் எனும் தலைப்பில் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஆகியோர் வகுப்பெடுத்தனர்.
நிறைவாக இந்நிகழ்ச்சியின் நோக்கம், அதனால் மாணவர்கள் அடையக்கூடிய பயன்கள் குறித்துப் பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் கருத்துரை வழங்கினார்.
குறிப்பும்; பரிசும்!
வகுப்புகளைச் சிறப்பாகக் கவனித்து குறிப்பெடுத்த விடுதலைபுரம் தெ.அரிபிரசாத், மணக்கால் பா.பூங்குழலி, அய்யம்பாளையம் எஸ்.தீபா, இலால்குடி பிரேமலதா ஆகிய நால்வருக்கும் பயனாடை அணிவித்து, நூல்கள் வழங்கப்பட்டன.
மொத்தம் 45 மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் ஆண்கள் 33, பெண்கள் 12 ஆவர். இதில் முதுநிலைப் பட்டதாரிகள் 3, இளங்கலைப் பட்டதாரிகள் 19, பள்ளிப் படிப்பு 13, தொழில் நுட்பப் பட்டதாரிகள் 10.
அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் நூல்கள் வழங்கப்பட்டன. இறுதியில் இயக்கப் பொறுப் பாளர்கள், பயிற்சியாளர்கள், மாணவர்கள் சேர்ந்த குழுப் படம் எடுக்கப்பட்டது. பெரியாரியல் பயிற்சிப் பட்டறையைச் சிறப்பாக ஒருங்கிணைத்துக் கொடுத்த மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாருக்கு இலால்குடி மாவட்டக் கழகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
பங்களிப்பும்; பங்கேற்பும்!
நிகழ்வில் இலால்குடி ஒன்றியத் தலைவர் சி.பிச்சை மணி, செயலாளர் மணிவாசகம், நகர இளைஞரணி செயலாளர் ஆர்.ஏ.சங்கர், மண்ணச்சநல்லூர் ஒன்றியத் தலைவர் கு.பொ.பெரியசாமி, செயலாளர் த.இராஜேந் திரன், புள்ளம்பாடி ஒன்றியத் தலைவர் மு.திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆ.வான்முடி வள்ளல், வீ.அன்புராஜா, இலால்குடி அந்தோணிசாமி, பெரியார் செல்வம், பெத்தலமிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஸ்கர் குழுவினர் மிகச் சிறப்பான உணவை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
நிறைவாக இலால்குடி நகர இளைஞரணி செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.