தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (24.1.2025), சென்னையில் வருகின்ற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 1 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.