குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு

2 Min Read

புதுடில்லி, ஜூலை 17- மோடி குறித்த அவதூறு வழக் கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண் டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுத்ததால், உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 

கருநாடகாவின் கோலார் மாவட்டத்தில் கடந்த 2019ஆ-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி என்று பெயர் வந்தது எப்படி? ’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசினார். இது சர்ச்சையை ஏற்ப டுத்தியது. இந்நிலையில், மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்து விட்டதாகக் கூறி, குஜ ராத் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பர்னேஷ் மோடி என்பவர், சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

2 ஆண்டுகள் சிறை: இதில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த மார்ச் மாதம் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் தகுதியி ழப்பு செய்யப்பட்டார். இந்த தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி, தனக்கு பிணை வழங்கிய சூரத் செஷன்ஸ் நீதிமன் றத்தில் ராகுல் மனு தாக் கல் செய்தார். ஆனால், தண்டனைக்கு தடை விதிக்க சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

இதையடுத்து, குஜ ராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறை யீடு செய்தார். இதன் விசாரணை கடந்த மே மாதம் நடைபெற்றது. ஆனால், சூரத் செஷன்ஸ் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக் காலத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடை விடு முறைக்குப் பின்னர் தீர்ப்பு வழங்குவதாக அறி வித்தார். 

இந்த வழக்கில் குஜ ராத் உயர் நீதிமன்றம் கடந்த 7ஆ-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில் நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் தெரி விக்கையில், ‘‘ராகுல் காந் திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண் டனை சரியானதுதான். இதற்கு ராகுல் காந்தி தடை கோர எந்தக் கார ணமும் இல்லை. மக்கள் பிரதிநிதிகளாக இருப்ப வர்கள், இதுபோன்ற அவ தூறுக் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. இந்த தீர்ப்பில் உயர் நீதி மன்றம் தலையிட முடி யாது. எனவே, மனுதார ரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப் படுகிறது’’ என்றார். இந் நிலையில், குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத் தில் ராகுல் காந்தி 15.7.2023 அன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அவரது சார்பில் வழக்குரைஞர் பிர சன்னா, மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *