காஞ்சிபுரம், ஜன. 24- காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராம பெருமாள் கோயில் பகுதியில் 11- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பளிங்கு கல்லால் ஆன புத்தா் சிலையை வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மய்த்தினா் கண்டறிந்தனா்.
அந்த கிராமத்தைச் சோ்ந்த ரவி என்பவா் கொடுத்த தகவலின்பேரில், அப்பகுதியில் ஆய்வு செய்தனா். அப்போது பளிங்கு கல்லால் செய்யப் பட்ட, மூக்கு சற்று சேத மடைந்த நிலையில், அமா்ந்த நிலையில் ஓரடி உயரமுள்ள புத்தா் சிலை இருப்பது தெரிய வந்தது.
ஆய்வு மய்யத் தலைவா் அதய்குமாா் கூறுகையில், இந்த புத்தா் சிலை 11ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கலாம். புத்தா் சிலை அமா்ந்த நிலையில் உள் ளது. நோ்த்தியாக வடிவமைக் கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அருகே பழைமையான புத்தர் சிலை கண்டெடுப்பு

Leave a Comment