கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

24.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாடு அரசு நெருக்கடி, தொடர் போராட்டத்துக்கு பணிந்தது ஒன்றிய அரசு – டங்ஸ்டன் சுரங்க திட்ட ஏலம் ரத்து: பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நன்றி.
* இந்தியர்களின் கடன் சிக்கல் அதிகமாகிறது; வங்கிகளில் நகைக் கடன் அதிகரிப்பது ஒரு சிக்னல் என்கிறார் கட்டுரையாளர் பட்ரலேகா சாட்டர்ஜி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சர்ச்சைக்குரிய வரைவு யு.ஜி.சி. விதிமுறைகள் குறித்து கருநாடக அரசு, மாநில உயர் கல்வி அமைச்சர்களின் மாநாட்டை நடத்தி விவாதிக்க உள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிறப்புரிமை குடியுரிமையை மறுவரையறை செய்யும் டிரம்பின் நிர்வாக உத்தரவுக்கு, தற்காலிக தடை விதித்தது அமெரிக்க உச்சநீதிமன்றம். ‘அப்பட்டமாக அரசியலமைப்பிற்கு விரோதமானது’ என நீதிபதி கருத்து.
தி இந்து:
* யு.பி.எஸ்.சி. தேர்வில் ஜாதி ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களை மோசடி செய்து அகப்பட்ட பூஜா கெத்கர் சம்பவத்தை அடுத்து, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வின் ஆரம்ப கட்டத்திற்கு வேட்பாளர்கள் கல்வி, ஜாதி மற்றும் மாற்றுத்திறனாளி சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை இணையத்தில் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி டெலிகிராப்:
* ‘சில நேரங்களில், அகிம்சை என்ற கருத்தை பாதுகாக்க வன்முறையை நாட வேண்டி இருக்கும்’ என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பையாஜி ஜோஷி. வலுவான ஹிந்து சமூகம் ‘பலவீனமானவர்களையும் நலிந்தவர்களையும் பாதுகாக்குமாம். என்று குஜராத் பல்கலைக்கழகத்தில் பேச்சு.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *