பெரிய டாக்டராய் இருப்பான்; ஆனால், அவனும் மூத்திரமும், சாணியும் சாப்பிட்டால் ஒருவன் மோட்சத்துக்கு போகலாம் என்று நினைப்பான்.
பெரிய வானசாஸ்திர நிபுணனாய் இருப்பான்; அவனும் பார்ப்பான் மூலம் தன் மாஜி தந்தைக்கு அரிசி, பருப்பு, காய்கறி, செருப்பு அனுப்புவான்.
ஒருவன் பெரிய உடற்கூறு சாஸ்திர நிபுணனாய் இருப்பான்; அவனும் தன் மனைவியையும், மகளையும் வீட்டுக்கு தூரமென்று வீதி திண்ணை அறையில் தள்ளி மூடிவைத்து விட்டு உள்ளே தாழ் போட்டுத் தூங்குவான்.
ஆகையால் மனிதனுக்கு பகுத்தறிவும், உலக கல்வியும் அறிய பள்ளிக்கூடமும் பட்டமுமே போதுமானதாகிவிடாது.
-தந்தை பெரியார் (‘குடிஅரசு‘, 19.12.1937)