சென்னை, நவ.15 – ‘தென்னிந்திய அறிவியல் நாடக விழா-2023’ பெங்களூருவில் நவ.23-ஆம் தேதி தொடங்க வுள்ள நிலையில், அதில் தமிழ்நாடு மாணவர்களை பங்கேற் கச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
‘தென்னிந்திய அறிவியல் நாடக விழா-2023’ போட்டிக்குத் தகுதியான மாணவர்களை அனுப் புவதற்கான தேர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கான மாவட்ட அளவி லான அறிவியல் நாடக போட்டி கள் கடந்த அக்டோபரில் நடத்தி முடிக்கப்பட்டன.
தொடர்ந்து மாநில அளவி லான போட்டிகள் இணைய வழி யில் நடத்தப்பட உள்ளன. மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்கள் மாநில அறிவியல் நாடகப் போட்டி யில் பங்கேற்கலாம். இதற்கான விவரங்கள் போட்டியை நடத்தும் சென்னை மாவட்டக் கல்வி அலுவலரால் தெரிவிக்கப்படும்.
அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி அறிவியல் நாடக போட் டிகளை எவ்வித புகாருக்கும் இட மின்றி நாளை நவ.16-ஆம் தேதிக் குள் நடத்தி முடிக்க வேண்டும். இந்த விழா, பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரையா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் நவ. 23, 24ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந் தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.