அப்பியம்பேட்டை, ஜன.23 குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அப்பியம்பேட்டை திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் திருநாள் பொங்கல் விழா 13.1.2025 அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர் தலைமையில், ஒன்றிய கழக செயலாளர் செந்தில் வேல் முன்னிலையில் நடந்தது. கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை,சந்திரசேகரன் மற்றும் குவைத் நாடு அயலக திமுக அணி பொறுப்பாளர் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பொங்கல் விழா குறித்த பெருமிதத்தை சிறப்பை திராவிடத்தின் எழுச்சியை விளக்கி துரை.சந்திர சேகரன், குவைத் தியாகராஜன் உரை யாற்றினர்.
நிகழ்வில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வேலு, மாவட்டத் துணைத் தலைவர் மணிவேல், இளை ஞரணி செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், நூலகர் கண்ணன், வடலூர் முருகன், மோகன் கிருஷ்ணா, குப்பம் ஊராட்சி தலைவர் சண்முகம், மேனாள் ஊராட்சி தலைவர் முத்துலிங்கம், கட்டியங்குப்பம் சேகர், சேப்பலாநத்தம் வரதராஜன், அறிவுச்செல்வன், சுரேஷ், பாபு சாதிக் மற்றும் கழக மகளிர் அணி தோழர்கள் சத்தியா, ஏழை முத்து, கலைச்செல்வி, குணசுந்தரி, மலர் மகாலட்சுமி, ஜெயந்தி, அறிவு ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
சர்க்கரைப் பொங்கல் வைத்து, பொங்கலோ பொங்கல் முழக்கமிட்டு தங்கள் மகிழ்ச்சியை தோழர்கள் தெரிவித்தனர். நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கலும், காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. பொங்கல் வாழ்த்துகளை தோழர்கள் பரிமாறிக் கொண்டனர். பொங்கல் விழாவை சீரோடும். சிறப்போடும் கொண்டாட அறிவுறுத்திய தந்தை பெரியார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.