ஒன்றிய அமைச்சருக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம்!

2 Min Read

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்

சென்னை, ஜன. 23– கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்ப தாவது:

வரலாற்று வளர்ச்சி

தமிழ் நிலத்தின் தொல் பொருள் மரபுகள் மற்றும் பண்பாட்டுச் செல்வங்களை வெளிக்கொணர்வதற்கான முக்கியமான முயற்சியாக கீழடி அகழாய்வு விளங்குகிறது. 982 பக்கங்களுக்கு மேற்பட்ட விரிவான அறிக்கையை முனைவர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமை யில் தயாரிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசிடம் தொல்லியல் ஆய்வு துறை (ASI) மூலம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் கீழடி அகழாய் வின் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள், விஞ்ஞானப் பார்வைகள் மற்றும் கி.மு. 800 முதல் கி.பி. 300 வரை தென்னிந்தியாவின் பண்பாட்டு வரலாற்று வளர்ச்சியை விரிவாக விவரிக்கிறது. இதன் மூலம் தமிழ் நாட்டின் தொல்பொருள் தளங் களின் மரபு மற்றும் பண்பாட்டு செல்வம் பொதுமக்கள் முன்னேவரும்.

எதிர்கால வழிகாட்டி

கீழடி அகழாய்வு தமிழ்நாட்டின் வரலாற்று பெருமைகளை முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. பல்லவர், சோழர், பாண்டியர், முத்த ரையர் மற்றும் நாயக்கர் உள்ளிட்ட பழம்பெரும் அரசுகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தளங்களில் இருந்து கிடைத்துள்ள தரவுகள் எதிர்கால தலைமுறைகளுக்கான வழிகாட்டியாக இருக்கும்.
2024 பிப்ரவரியில், மதுரை உயர்நீதிமன்றம் பொது நல மனுவின் அடிப்படையில் ஒன்றிய அரசுக்கு மூன்று மாதத்திற்குள் உடனடியாக வெளியிடும்படி ஆணை வழங்கியது மற்றும் அதன் விவரங்களை பொது மக்களுக்குகிடைக்கச் செய்யவும் கூறப்பட்டது.

நடவடிக்கை

இந்த அறிக்கையின் வெளியீடு கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது தமிழர்களின் பண்பாட்டு செல்வத்தை உலகளவில் விளக்குவதில் முன்னேற்ற த்தை உருவாக்கும். ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த அறிக்கையை விரைவாக வெளியிட வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டின் தொல்பொருள் மரபுகளை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். இத்துடன், கீழடி அகழாய்வு அறிக்கையை விரைவில் வெளியிட ஒன்றிய அரசை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு டாக்டர் கலாநிதி வீரா சாமி அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த கடிதத்தில் நகலை பிரதம ருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *