கொடராச்சேரி ஒன்றியம், மேல உத்தரங்குடி ஊராட்சி கிராமம் சாமிதுரையினுடைய தகப்பனார் பெரியார் பெருந்தொண்டர் மொழிப்போர் தியாகி வியாகுல சாமி – (94 வயது) இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று 23.1.2025 மாலை சுமார் 4 மணி அளவில் நடைபெற்றது. மாவட்ட கழகத்தின் சார்பில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மறைவு
குடவாசல் ஒன்றியம் இளைஞரணி தலைவர் உ.பாண்டியனுடைய தந்தை, பெரியார் பெருந்தொண்டர் சீ.உத்திராபதி இன்று (23.01.2025) அதிகாலை இயற்கை எய்தினார். அவரது இறுதி ஊர்வலம் இன்று (23.01.2025) மாலை 4 மணி அளவில் நெய்குப்பையில் உள்ள அவர்களது இல்லத்தில் இருந்து புறப்பட்டு, இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட்டன. திருவாரூர் மாவட்ட கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து அவர்களுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மறைவு
தந்தை பெரியார் பற்றாளர், தன்மான இயக்கத்தவர் என பெருமைக்குரிய கும்பகோணம் மறைந்த அருணாசலத்தின் மகனும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சிப் பயிற்சி இயக்ககத்தின் முதல் இயக்குநருமான டாக்டர் அ.பன்னீர் செல்வம் தம் 92ஆம் அகவையில், நேற்று (22.01.2025) புதுச்சேரியில் இயற்கை எய்தினார். அவர்தம் உடல் இறுதி மரியாதைக்காக கும்பகோணம் கொண்டுவரப்பட்டது. தொடர்பு எண் : 9444835592 பி.இரத்தினசபாபதி.