மருத்துவக் கல்லூரியும் உதவிப் பேராசிரியர் நியமனமும்

2 Min Read

மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் நியமன விதிகளில் தளர்வு கொண்டுவர தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவு எடுத்துள்ளதாக வெளியாகும் செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பத்திரிகைச் செய்தி விவரத் துடன் வெளியிட்டப் (20.1.2025) பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘பிரதமா் மோடி தலைமையி லான ஒன்றிய அரசு முதலில், ‘நீட்-பிஜி’ என்ற தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலமாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தகுதி (கட்-ஆஃப்) மதிப்பெண் விகிதத்தைக் குறைத்தது.

தற்போது, மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமன விதிகளில் தளா்வு கொண்டுவர என்எம்சி முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கற்பித்தல் பணியில் அனுபவம் இல்லாத மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையில் பட்டயப் படிப்பை முடித்தவர்களையும் மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கும் வகையில் விதிகளில் தளர்வு கொண்டுவர என்எம்சி பரிந்துரைத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவக் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும் என்ற மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் என்.எம்.சி. உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த தேசிய மருத்துவ ஆணையம் (NMC) தற்போது மேற்கொள்ளும் முடிவுகள் இந்த விஷயத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தகுதி என்று இவர்கள் சொல்லுவது எல்லாம் எந்தத் தகுதியின் அடிப்படையில்?
மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டு மானால் ‘நீட்’ எழுத வேண்டும்; மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து டாக்டர் தேர்வில் வெற்றி பெற்றாலும், அதோடு நிற்பதில்லை; அதற்கு மேலும் ‘நெக்ஸ்ட்’ என்ற தேர்வு எழுதி அதில் வெற்றி பெற வேண்டும் என்று எல்லாம் விதி ஏற்படுத்தியுள்ளனர். கேட்டால் தகுதி – திறமை இல்லாமல் டாக்டராகப் பணி செய்தால் என்னாகும்? மக்கள் உயிரோடு விளையாட முடியுமா? என்று கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்புவார்கள்.
(மார்க்குக்கும், நடைமுறை யதார்த்தத்துக்கும் எவ்வித ஒட்டுறவும் இல்லை என்பது யதார்த்தம்)
ஆனாலும் பார்ப்பனர்கள் அந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக மனப்பாட அடிப்படையிலான தேர்வையும் மார்க்கையும் முன்னிறுத்துகிறார்கள்.

ஆனால் மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள்,உதவிப் பேராசிரியர்கள் நியம னங்களில் மட்டும் சில தளர்வுகளைக் கொண்டு வந்துள்ளது மருத்துவக் கவுன்சில். கற்பித்தல் பணியில் அனுபவம் இல்லாதவர்களையும், மருத்துவத் துறையில் வெறும் பட்டயப் படிப்பு முடித்தவர்களையும் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கலாம் என்கிறது மருத்துவக் கவுன்சில்.
ஒன்றிய அரசிடம் இருக்கும் தரவுகளை வைத்துக் கொண்டு உயர் ஜாதிப் பார்ப்பனர் களுக்கு இந்த முறையில் சாதகமாக இருக்கும் என்ற நோக்கம் இதன் பின்னணியில் இருக்க வேண்டும். பார்ப்பான் குடுமி சும்மா ஆடாது!
‘நீட்டை’ ஒழித்து விட்டு, பிறகு களத்துக்கு வரட்டும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *