பொன்னுக்கு வீங்கி பாதிப்புக்கு தடுப்பூசி
“பொன்னுக்கு வீங்கி” பாதிப்பு அதிகரித்து வருவதால் தேசிய தடுப்பூசி அட்டவணையில் எம்எம்ஆர் (மீஸல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா) தடுப்பூசியை சேர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
இணைய வணிகத்தை
ஒழுங்குபடுத்த வரைவு வழிகாட்டுதல்
இந்தியாவில் இணைய வழியில் பொருள்களை வாங்கும் ‘எண் வணிக’ நடைமுறை வேகமாக வளர்ந்து வரும் சூழலில் மோசடி நடவடிக்கைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கவும், நம்பிக்கையை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இணைய வணிகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதலை ஒன்றிய அரச வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு நன்கொடைகளுக்கு அபராதம்
வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்கு முறைச் சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்யாமல் அல்லது பதிவு காலாவதியான பின்னரும் வெளிநாட்டு நிதியைத் தொடர்ந்து பெற்று பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.