சேத்தியாத்தோப்பு,ஜன.23- சேத்தியாத்தோப்பு நடராசா திருமண மண்டபத்தில் 18.1.2025 அன்று மாலை 5.30 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.
சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
மாவட்ட காப்பாளர்கள் அரங்க.பன்னீர்செல்வம், அ.இளங்கோவன், கடலூர் மாவட்டத் தலைவர் சொ.தண்டபாணி, விருத்தாசலம் மாவட்டத் தலைவர் த.சீ.இளந்திரையன், விருத்தாசலம் மாவட்ட செயலாளர் வெற்றிச் செல்வன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
மாவட்டத் தலைவர் பேரா.
பூ.சி.இளங்கோவன், திருமுட்டம் ஒன்றிய தலைவர் கு.பெரியண்ண சாமி, திருமுட்டம் ஒன்றிய செயலாளர் கொழை இரா.இராசசேகர், மாவட்ட துணைச் செயலாளர் ப.முருகன், மேனாள் மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் துரை.ஜெயபால், மாவட்ட இளைஞரணி செயலாளர் மா.பஞ்சநாதன், பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் பூ.வே.அசோக்குமார், சேத்தியாத்தோப்பு நகர தலைவர் பா.இராசசேகர் மாவட்ட தொழிலாளரணி தலைவர் தெ.ஆறுமுகம், தொழிலாளரணி மாவட்ட செயலாளர் அ.சுரேஷ், இளைஞரணி பி.ஸ்டாலின், சிதம்பரம் நகர அமைப்பாளர் இரா.செல்வரத்தினம், மாவட்ட கழகத் துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தன் உரையில்… சிதம்பரம் பொதுக்குழுவை பிப். 15ஆம் தேதி சிறப்பாக நடத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நம் இன எதிரிகளை வெற்றி கொள்ளும் வகையில் நம் பிரச்சாரம் அமைய வேண்டும். பெரியாரை கொச்சைப்படுத்தினால்தான் தமிழ்நாட்டில் காலூன்ற முடியும் என்ற நிலைக்கு நம் இன எதிரிகளான பிஜேபியும், ஆர்.எஸ்.எஸ்சும் தள்ளப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அவர்களின் எண்ணங்கள் நிறைவேறவில்லை. அதற்கு நம் இயக்கம்தான் காரணமாகும். தந்தை பெரியாரை கொச்சைப்படுத்துவதன் மூலம், தாங்கள் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கின்றனர். நம் இயக்கமும், ‘திராவிட மாடல்’ ஆட்சியும் இருக்கின்றவரை, அது நிறைவேறாது என்று எடுத்துரைத்தார்.
தீர்மானங்கள்:
1. பிப்ரவரி 15ஆம் தேதி கழகப் பொதுக்குழுவையும், அன்று மாலை, பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தையும் மாநாடு போல மிகச் சிறப்பாக நடத்துவதெனவும் தீர்மானிக்கப் பட்டது. பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு, நம் கருத்துடைய தோழமைக் கட்சித் தலைவர்களை அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
2. பொதுக்குழுக் கூட்டத்தில் ‘விடுதலை’ சந்தாக்கள், பெரியார் உலகம் நன்கொடை வழங்குவ தெனவும் தீர்மானிக்கப் பட்டது. மாவட்டம் முழுதும் வசூல் பணியில் ஈடுபடுவது என தீர்மானிக்கப் பட்டது.
3. சிதம்பரம், விருத்தாசலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் சுவரெழுத்து விளம்பரங்கள் செய்வதெனவும், முக்கிய நகரங்களில் பேனர்கள் மூலம் விளம்பரம் செய்வதெனவும் தீர்மானிக்கப் பட்டது.
இறுதியாக, மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் நன்றி கூறினார். கடலூர் மாவட்ட காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம் அனைவருக்கும் கேக் மற்றும் தேநீர் வழங்கினார். பொதுக்குழுவுக்கு தன் செலவில் 100 பெரிய கொடிகள் வாங்கி அளிப்பதாக அரங்க.பன்னீர்செல்வம் உறுதியளித்தார்.
நன்கொடை அறிவித்தவர்கள்
பேரா. பூ.சி.இளங்கோவன் – ரூ.10,000
யாழ். தீலிபன் – ரூ. 5000
ப.முருகன் – ரூ. 5000
பூ.வே.அசோக்குமார் – ரூ. 5000
அரங்க.பன்னீர்செல்வம் – ரூ. 2000 (முதல் தவணை)
சொ.தண்டபாணி – ரூ. 5000
தெ.ஆறுமுகம் – ரூ. 1000
மற்ற தோழர்கள் பிறகு அளிப்பதாகக் கூறினார்கள். மாவட்டம் முழுவதும் வசூல் செய்வதென அறிவிக்கப்பட்டது.