100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிப்பதா? ஒன்றிய அரசின்மீது ப.மாணிக்கம்தாகூர் எம்.பி கடும் தாக்கு

1 Min Read

விருதுநகர், ஜன.23- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்த விவ சாயத் தொழிலாளர்களுக்கு 7 வாரங்களாக ஊதியம் வழங்கவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். மோடி அரசு, 100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் வேலையை செய்து வருகிறது. அதனை முறையாக செயல்படுத்தக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மக்களவையில் போராடி வருகிறோம்.

பொதுப் பிரச்சினைகள்

பரந்தூர் பிரச்சனையில் விஜய் பொதுப் பிரச்சனைகளைப் பற்றி பேசத் துவங்கி இருப்பது மகிழ்ச்சியான விசயம். ஜனநாயகத்தில் வரவேற்கத்தக்கது. ஆனால், அதற் கென்று முறை உள்ளது. போராடும் மக்களின் கோரிக்கைகள் பற்றி பல கட்சிகள் நேரில் சென்று பார்த்துள்ளன. அதேவேளை, இதில் அரசியல் செய்யாமல், தமிழ்நாட்டில் வளர்ச்சியையும் பார்க்க வேண்டும்.

அனைவருக்குமான தலைவர் பெரியார்

விஜய் மக்கள் பிரச்சினை பற்றி காலதாமதமாக தெரிவித்துள்ளார். சீமான், எடிட் செய்யப்பட்ட படத்தைப் பற்றிய கதையைக் கூற வேண்டும். தற்போது முக்கியமான பிரச்சினையாக தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட, சிறுபான்மை யினர் என அனைவராலும் போற்றப்படு கின்ற தலைவராக பெரியார் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *