வணிகர்களுக்கு தமிழ்நாடு அரசு
எப்போதும் துணையாக இருக்கும்
மதுரை, ஜன.23 வணிகர் களின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணையாக இருக்கும் என்று மதுரையில் நடந்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மதுரையை மய்யமாகக் கொண்டு 1924ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் தமிழ் நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா, மதுரை காமராஜர் சாலையில் உள்ள வர்த்தக சங்க அரங்கில் நேற்று நடந்தது. இதில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டு பேசி னார். அப்போது அவர் கூறியதாவது: உங்களின் வளர்ச்சிக்கு நமது அரசு எப் போதும் உறுதுணையாக இருக்கும்.
பரிசீலித்து நடவடிக்கை
எப்படி வியாபாரிகள் சாமர்த்தியமாக பேசி வியாபாரத்தை அதிகப் படுத் துவார்களோ, அதே போல அரசிடம் சாமர்த்தியமாக பேசி, செய்யக்கூடிய ஆற்றல் அனைவருக்கும் இருக்கிறது. இங்கே வணிகர் சங்கத்தின் சார்பில் வைத்திருக்கும் கோரிக்கைகளை நிச்சயமாக, உறுதியாக பரிசீலித்து, அதனை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் சொன்னதைதான் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் அதுவும் உங்களுக்குத் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதலமைச்ச ருக்கு வணிகர்கள் சார்பில் வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது. பின்னர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும், முதலமைச்சரிடம் வணிகர் சங்கத்தினர் வழங்கினர்.