சிவகங்கை, ஜன.21- சிவகங்கைமாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ஜனநேசன் (வயது 70). எழுத்தாளரான இவர் காரைக்குடி அரசு கலைக்கல்லூரியில் நூலகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மகன் கர்ணன். இவர் அய்.ஏ.எஸ். பயிற்சி முடித்து தெலங்கானா மாநிலத்தில் உணவு பாதுகாப்புத்துறை மேலாண்மை இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மகன் நிரு பன்பாரதி. இவர் லண்டனில் மருத்துவராக பணிபுரிகிறார்.
ஜனநேசன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங் கத்தின் மாநில குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஜனநேசன் ஓய்வு பெற்ற பிறகு தனது மகன் கர்ணனுடன் தெலங்கானாவில் வசித்து வந்தார். அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான காரைக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடலை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொடையாக வழங்க அவரது மகன் கர்ணன் முன்வந்தார்.
அதற்கான ஆவணங்களுடன் அவரது உடலை குடும் பத்தினர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மண்டல மருத்துவ அலுவலரிடம் ஒப்படைத்தனர்.