21.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது போன்று, யுஜிசி விதிகளை திரும்ப பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுங்கள்: இந்தியா கூட்டணி முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.
* பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக யுஜிசி வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
* ராமன் கோவில் கட்டியதற்கு பிறகு தான் இந்தியா வுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அமெரிக்காவின் 47ஆவது அதிபராக பதவியேற்றார் டொனால்டு டிரம்ப்; பொற்காலம் துவங்குவதாக டிரம்ப் பேச்சு.
தி இந்து:
* அரசமைப்புக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்; அரசமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்படாத பல விடயங்களில் ஆளுநர் தலையிடுகிறார் அரசமைப்பு விதிகளை தமிழ்நாடு ஆளுநர் கேலிக்கூத்தாக்கி வருகிறார். தமிழ்நாடு ஆளுநரின் தலையீடு கவலை அளிப்பதாக உள்ளது” என ஆளுநர் குறித்து தமிழ்நாடு சட்டசபை தலைவர் அப்பாவு பேச்சு. பேசும்போது மாநிலங்களவை துணைத் தலைவர் தலையீடு செய்து தொடர்ந்து பேச அனுமதி மறுப்பு. இதையடுத்து மு.அப்பாவு மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்.
* மருத்துவ பட்டதாரிகள் அல்லாதவர்களை மருத்துவ மாணவர்களுக்கு ஆசிரியராக நியமனம் செய்யலாம், தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வரைவு அறிக்கை வெளியீடு.
* யுஜிசியின் வரைவு ஒழுங்குமுறை கடுமையான அரசமைப்பு சிக்கல்களை கொண்டுள்ளது, யுஜிசி சட்டத்தில் துணைவேந்தர்களின் தேர்வு மற்றும் நியமனம் தொடர்பான எந்த விதிகளும் இல்லை.
* யுஜிசியின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் 10 உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட யுஜிசி விதிமுறைகள் மாநில சட்டமன்றங்களால் நிறை வேற்றப்பட்டு ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவ ரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாநில பல்கலைக்கழக சட்டங்களின் விதிகளை மீற முடியுமா என்பதுதான் கேள்வி என்கிறார், கே.அசோக் வர்தன் ஷெட்டி, அய்.ஏ.எஸ்.
தி டெலிகிராப்:
* ஒருவர் தனது தந்தையின் அடக்கத்திற்காக எங்களிடம் வர வேண்டும் என்று கூறுவதற்கு வருத்தப்படுகிறோம், உச்சநீதிமன்றம் கவலை. சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தனது தந்தை போதகர் சுபாஷ் பாகேலை அவர்களின் சொந்த ஊரான பஸ்தாரில் உள்ள சிந்த்வாரா கிராமத்தில் அடக்கம் செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து ரமேஷ் பாகேல் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘பி.என். ராவ் இல்லையென்றால், அரசமைப்புக்கு இன்னும் 25 ஆண்டுகள் எடுத்திருக்கும் என்று அம்பேத்கர் கூறியிருந்தார்’: பார்ப்பன மாநாட்டில் கருநாடகா உயர்நீதிமன்ற நீதிபதி தீட்சித் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பில்லியனர்களின் செல்வம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலக வங்கியின் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை (ஒரு நாளைக்கு $6.85 டாலர் சம்பாதிப்பவர்கள்) கிட்டத்தட்ட 3.6 பில்லியன் மக்கள் (உலக மக்கள் தொகையில் 44%) இன்னும் அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்ய போராடி வருகின்றனர் என உலகளாவிய சமத்துவமின்மையின் அபாயகரமான நிலவரத்தை ஆக்ஸ்பாம் அறிக்கை வரைகிறது.
* உத்தரகண்ட் அமைச்சரவை யு.சி.சி விதிமுறைகளை அமல்படுத்த ஒப்புதல்; குடியரசு நாளான ஜனவரி 26 அன்று செயல்படுத்தப்படலாம் என்று தகவல்.
.- குடந்தை கருணா