சென்னை,ஜன.21- மெரினா கடற்கரையை குப்பை கூளமாக்கிய விவகாரத்தில், குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் சிறப்பு படைகளை அமைக்க அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குவிந்தனர்.
இதனல், கடற்கரை முழுவதும் குப்பை கூளமாக மாறியது. இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்தியகோபால் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரித்தனர். அப்போது நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, தனக்கு வந்த இரு ஒளிப்படங்களை சுட்டிக்காட்டி, மெரினா கடற்கரையில் காணும் பொங்கலையொட்டி குப்பை கூளமாக்கியது குறித்து கேள்வி எழுப்பினார். சிறப்புப் படை கடற்கரையை எப்படி பாதுகாப்பது என மக்களுக்கு தெரியவில்லை என வேதனை தெரிவித்த தீர்ப்பாயம், காணும் பொங்கலுக்கு விடுமுறை அறிவிக்க கூடாது என அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாகக் குறிப்பிட்டது. அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான சண்முகநாதன், குப்பை கொட்டுவதை குற்றமாக கருதி, அபராதம் விதிக்காவிட்டால் இதை தடுக்க முடியாது எனவும், படித்தவர், படிக்காதவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல், குப்பையை வீசிச் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து, குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் சிறப்பு படைகளை அமைக்க வலியுறுத்திய தீர்ப்பாயம், இது குறித்து சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சிம் கார்டு செயல் இழப்பை தடுக்க புதிய திட்டம் புதுடில்லி,ஜன.21- AIRTEL, JIO, VI ஆகிய சிம்கார்டுகளில் ரூ.20 பேலன்ஸ் வைத்திருந்தால் 4 மாதங்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் பயனர்கள் நம்பரை தக்க வைக்கலாம் என டிராய் (TRAI) அறிவித்துள்ளது. ரீசார்ஜ் செய்யாமல் 90 நாட்கள் வரை நம்பரை தக்க வைக்கும் வசதி ஏற்கனவே உள்ள நிலையில், ரூ.20 பிடித்தம் மூலம் மேலும் 30 நாட்களுக்கு Validity நீட்டிப்பு. BSNLஇல் இந்த அவகாசம் 180 நாட்களாக உள்ளது.