ராஞ்சி, நவ.27 ராமர் கோயிலை வைத்து பாஜக அரசியல் செய்து வருவதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பகேல் விமர்சனம் செய்துள் ளார். நேற்று (26.11.2023) பூபேஷ் பகேல் செய்தியாளர்களிடம் பேசிய தாவது:
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு தலின்படி தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இதில் பாஜக அரசியல் செய்து வருகிறது. சத்தீஸ்கரில் ஏராளமான ராமர் கோயில்களை காங்கிரஸ் ஆட்சியில் கட்டியுள்ளோம். ஆனால் ராமரின் பெயரைச் சொல்லி நாங்கள் வாக்கு கேட்பதில்லை ராமரை வைத்து அரசியல் செய்வ தில்லை” என்று கூறினார். இதனை யடுத்து தெலங்கானாவில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இரண்டு நாட்கள் தெலங்கானா செல்லவுள் ளதாக பூபேஷ் பகேல் தெரிவித்தார்.