20.1.2025
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* பசு மாட்டு மூத்திரத்தில் மருத்துவ குணங்கள் உள்ளன; குடிப்பது நல்லது என்கிறார் சென்னை அய்.அய்.டி. இயக்குநர் காமகோடி. . ஆதாரமின்றி பேசினால், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருத் துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனம்.
தி இந்து:
* அரசு கலைக் கல்லூரிகளில் இளங்கலை (இளங்கலை) படிப்புகளில் சேர்க்கை பெறுவதில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு கொள்கை பயன் அளித்துள்ளது, தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல்
* ஒன்றிய அரசு ‘ரெய்டு ராஜ்ஜியம் மற்றும் வரி பயங்கரவாதத்தை’ முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; இந்திய உற்பத்தி வேலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ஊதியம் மற்றும் வாங்கும் சக்தியை அதிகரிக்க தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், இது இந்திய வணிகங்களை முதலீடு செய்ய ஊக்குவிக்கும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் (தகவல் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை.
* நாடாளுமன்றத்திற்கான வருடாந்திர நாட்காட்டியை உருவாக்கவும், கட்டாயமாக ஒரு ஆண்டில் குறைந்தது 100 அமர்வுகள் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ’பிரையன் அரசுக்கு வேண்டுகோள்.
தி டெலிகிராப்:
* உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து. எரிவாயு உருளைகள் வெடித்து சிதறியது கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து 18 கூடாரங்கள் எரிந்து சாம்பல்
.- குடந்தை கருணா