வில்மீஸ் கட்டிகள்
வில்ம்ஸ் கட்டி அல்லது நெப்ரோ பிளாஸ்டோமா என்பது சிறுநீரகங்களில் ஏற்படும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான புற்றுநோயகும்.
மனித உடலில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன அவை அவரை வடிவத்தில் அடற்சிவப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் உள்ளன. இவை மேல் வயிற்றுப் பகுதியில் கடைசி மார்பு முள்ளெலும்பிற்கு மூன்றாவது வயிற்றுப்பகுதியில் முள்ளெலும்பிற்கு இடையே முதுக்குப்புற உட்சுவர் பரப்பை ஒட்டி அமைந்துள்ள இடது சிறுநீரகத்தில் நீள்வெட்டுத்தோற்றத்தில் வெளிப்புற கார்டெக்ஸ் உட்புறமெடுல்லா மற்றும் பெல்வீஸ் பகுதிகளில் காணப்படுகின்றன.
ஒவ்வொரு சிறுநீரகமும் சிக்கலான குழல்கள் கொண்ட ஒரு மில்லியன் நெப்ரான்களால் ஆனது. இரத்தத்தை சுத்தம் செய்து சிறுநீராக வெளியேற்றுகின்றன.
முக்கியமான இச்சிறுநீரகத்தில் உண்டாகும் புற்றுநோயே வில்ம்ஸ் கட்டியாகும். ஒரு சிறு நீரகத்தில் அல்லது இரண்டு சீறுநீரகத்திலும் இக்கட்டிகள் தோன்றும். பெரும்பாலான வில்ம்ஸ் கட்டிகளுக்கு தெளிவான காரணம் இல்லை வில்ம்ஸ் கட்டிகள் ஆண்களை விட பெண்களிடம் சற்று அதிகம்மரபணு குறைவினால் குடும்பத்தில் வில்ம்ஸ் கட்டிபை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
சில மரபணு நோய்க்குறிகள், பிறப்பு குறைபாடுகள் உள்ள பல்வேறு நோய் உள்ளவர்களுக்கு இப்புற்றநோய் உருவாக வாய்ப்புகள் அதிகம்.
வில்ம்ஸ் கட்டிகள் ஏற்பட என்ன காரணம்?
கருப்பையில் கருவளரும் போது சிறுநீரகங்கள் மிகவிரைவாக வளரும் முதிர்ச்சியடைந்த சிறுநீரக செல்களாக உருவாக வேண்டிய சில செல்கள் ஆரம்ப சிறுநீரக செல்களாகவே இருக்கும். பொதுவாக இந்த செல்கள் குழந்தைகளுக்கு 3 முதல் 4 வயதில் முதிர்ச்சி அடைந்து விடும். ஆனால் அவை முதிர்ச்சியடையாவிட்டால் இரத்த செல்கள் கட்டுப்பாட்டை மீறி இது வில்ம்ஸ் கட்டியாக மாறிவிடுகின்றன. ஆரம்ப கால சிறுநீரக செல்களில் சில மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீரகங்களால் வளர்ச்சியடையும் போது பிரச்சனை வழிவகுக்கிறது. சில வில்ம்ஸ் கட்டிகள் குறிப்பிட்ட மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டுள்ளன.
வில்ம்ஸ்கட்டிகளின் அறிகுறிகள்
வயிற்று வீக்கம் ஏற்படும் சமயங்களில் வில்ம்ஸ் கட்டிகளின் அறிகுறியாக பெரிதாக வலி இல்லாமல் இருக்கும். காய்ச்சல் குமட்டல், பசியின்மை மூச்சுத்திணறல் சிறுநீரில் இரத்தம் போவது போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
பரிசோதனை
இந்த வகையான நோயாளியின் இரத்தம் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும் பின்னர், வயிற்றுப்பகுதியை ஸ்கேன் செய்யும் போது அல்ட்ராசவுண்ட் சிடி ஸ்கேன். கம்ப்யூட்டர்மோகிராபி ஸ்கேன், எம்.ஆர்.ஐ போன்ற பரிசோதனையில் சிறுநீரகத்தில் கட்டி இருப்பதும் அவை மற்ற உறுப்புகளுக்கு பரவி உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும். பயாப்ஸி மூலம் புற்றுநோயை உறுதி செய்யப்படுகிறது.
சிகிச்சை
பெரும்பாலான வில்ம்ஸ் கட்டிகளுக்கு அறுவை சிகிச்சையே முதல் சிகிச்சையாகும். சில சமயங்களில் கட்டி பெரியதாக இருந்துஅருகிலுள்ள இரத்த குழாய்களில் மற்ற உறுப்புகளில் ஒட்டி இருந்தாலும், இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு இருந்தால் அறுவைசிகிச்சை கடினமாக இருக்கும் ஆகவே கீமோ தெரபி கதிர்வீச்சு சிகிச்சை அல்லது இரண்டும் கொடுக்கப்படுகிறது. பின் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிகிச்சைக்குப்பின் சிறுநீரக செயல்பாட்டை இரத்தப்பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளவேண்டும்.