போர் நிறுத்தத்தின் முதல் நாளில் இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 90 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். கைதிகளான ரோமி கொனின் (24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் (31) ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. தற்போது விடுதலை செய்யப்படவுள்ள 3 பேரின் ஒளிப்படங்கள் உலகளவில் பரவலாகி வருகிறது.