ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மக்கள் ஏற்க மாட்டார்கள் – மூத்த வழக்குரைஞர் கபில் சிபல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.19 சென்னை கீழ்பாக்கம் ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நேற்று (18.1.2025) நடைபெற்ற திமுக சட்டத்துறையின் 3 ஆவது மாநில மாநாட்டில் பேசிய மூத்த வழக்குரைஞர் கபில்சிபல், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் கோட்பாட்டின் அடிப்படையிலேயே குறைபாடு உள்ளது. அரசு நம்பிக்கை இழந்துவிட்டால் நாடா ளுமன்றத்திற்கோ, சட்ட மன்றத்திற்கோ உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும், அய்ந்து ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாது.

ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒவ்வொரு பிரச்சினை உள்ளது, இந்தியா என்பது ஒன்றியங்களின் அரசு. அதுதான் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும். ஒன்றியங்களை சிதைத்து ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு,ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கட்சி என்பதை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். இதை இந்திய மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இந்திய குடியரசின் ஜனநாயக பணிகளின் அடிப்படைக் கூறுகளை சிதைக்கும் முயற்சி தான் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை என்றார்.

மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி
இதையடுத்து பேசிய மேனாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி; ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்தால் தற்போது ஆகும் தேர்தல் செலவை விட மூன்று மடங்கு கூடுதலாக செலவு ஆகும். அத்துடன் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒரு கோடி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தொகுப்பு தேவைப்படும். ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தின் விலை ரூ.35 ஆயிரமாக இருக்கிறது. எனவே ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தும் போது கூடுதல் செலவு ஏற்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்பட்டால் தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்து வதில் சிக்கல்கள் ஏற்படும் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *