பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
தெருமுனை கூட்டங்களை மிக சிறப்பாக நடத்துவது என முடிவு
காரைக்கால்,ஜூலை 18– கடந்த 06.07.2023 அன்று நடைபெற்ற தலைமை செயற் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி மாநில ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயகுமார் கலந்து கொண்டு கருத்துரை வழங்கிய காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் 13.07.2023 வியாழன் காலை 10 மணி அளவில் காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள சிவ . வீரமணி அவர்களின் அலுவலகத்தில் காரைக்கால் மாவட்ட கழக தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் காரைக்கால் மாவட்ட காப்பாளர் ரெ. ஜெயபாலன் அவர் களின் முன்னிலையில் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பொன் . பன்னீர்செல் வம் அனைவரையும் வரவேற்றார்.
கடந்த 06.07.2023 அன்று நடை பெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி கழக அமைப்பு பணிகளுக்காக காரைக் கால் மாவட்டத்தில் உள்ள 5 கொம் யூன்களான திருநள்ளாறு, நெடுங்காடு, கோட்டுச்சேரி, நிரவி, திருப்பட்டினம், ஆகிய பகுதிகளுக்கும் காரைக்கால் (நகராட்சி) நகரத்திற்கும், மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெய குமார் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணியும் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டத் தில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட் டனர்.
கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய புதுச்சேரி மாநில தலைவர் சிவ. வீரமணி காரைக்காலில் அமைப்பு ரீதியாக கழகத்தை கட்டமைத்து வலுப்படுத்த வேண்டும் மாணவர்களை கழகத்தில் இணைப்பதற்கான பணியினை தீவிர படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கருத்துரை வழங்கிய மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் பேசும்போது 06.07.2023 அன்று நடைபெற்ற மாநில தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி காரைக்கால் மாவட்டத்தில் ஏற் படுத்தப்பட்டுள்ள காரைக்கால் நகர பகுதி மற்றும் கொம்யூன்களில் நியமிக் கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் கழகப் பணிகளை தொடர்ந்து செய்ய வேண் டும் மேலும் கழகத்திற்கு உறுப்பினர் களை சேர்க்க வேண்டும்.
வைக்கம் நூற்றாண்டு விழாவை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் தெருமுனை கூட் டங்களாக நடத்த வேண்டும் இதனை பொறுப்பாளர்கள் விரைவாக நடத்து வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
எதிர்வரும் 27.8.2023 அன்று காரைக்காலில் நடைபெற இருக்கின்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை வெகு சிறப்பாக நடத்த வேண்டும். இதில் மாணவர்களையும் இளைஞர் களையும் அதிக அளவில் பங்கேற்று பயன் பெற செய்ய கழகத் தோழர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
விடுதலை சந்தாக்களை சேர்த்து வழங்க வேண்டும். உளுந்தூர்பேட்டை யில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேசும்போது சொன்ன கொடி, செடி , படி என்ற மூன்று முத்தான சொற்களை நாம் நமது பகுதிகளில் அறிமுகப்படுத்த வேண்டும் கழகத் தோழர்கள் இல்லம் தோறும் கழகக் கொடியினை ஏற்ற வேண்டும் கூடவே வீடுகளில் ஒரு செடியையும் நட்டு வளர்க்க வேண்டும். பெரியார் படிப்பகங்களை ஏற்படுத்தி அதில் மாணவர்களும் இளைஞர்களும் நமது கழக புத்தகங்களை படிப்பதற்கு கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவித்த கொடி , செடி , படி இவற்றை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பேசினார்.
பெரியார் பெருந்தொண்டர் மறைந்த சண்முகவேல் அவர்களின் மருமகளும் திருநள்ளாறு கொம்யூன் திராவிடர் கழக செயலாளர் ச. பன்னீ ரின் இணையர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் குடும்பத்தாருக்கு ஆறு தலையும் தெரிவிக்கப்பட்டது.
வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி தலைமைக் கழகம் அறிவித்து கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் கலந்து கொள்ளும் மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் ஒருங்கிணைக்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை காரைக்காலில் மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் அதிக அளவில் கல்லூரி மாணவர்களை கலந்து கொள்ள செய்வது எனவும், வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவை தெருமுனை கூட்டங்களாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் நடத்துவது என வும், விடுதலை சந்தாக்களை சேர்த்து வழங்குவது எனவும் முடிவு செய்யப் பட்டது.
புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப் பிற்கு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யாமல் நீட் போன்ற நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் தேர்வு நடைபெறும் என புதுச்சேரி அரசு அறிவித்து இருந்ததை நீக்க வேண்டும் என உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற 10 மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்காக கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
புதுச்சேரியில் ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் நடைபெறாததால் பள்ளிக்கூடம் திறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் ஆசிரியர்கள் இல்லாத தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப் பட்டு வருகிறது இதனை ஆசிரியர்கள் கவனத்தில் கொண்டு அரசு ஏற்படுத்தி யுள்ள பணியிட மாறுதல் கொள்கையை ஏற்றுக்கொண்டு பணிக்கு செல்ல வேண்டும்.
தற்போது 2000 ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள் 900 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன புதுச்சேரி அரசு மாணவர்களின் நலன் கருதி இதனை போர்க்கால அடிப் படையில் நிரப்ப வேண்டும் என இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள்
மாவட்ட காப்பாளர் : ரெ. ஜெயபாலன்.
மாவட்டத் தலைவர்: குரு. கிருஷ்ணமூர்த்தி.
மாவட்ட செயலாளர்: பொன். பன்னீர்செல்வம்.
மாவட்டத் துணைத் தலைவர் : கி. ராஜரத்தினம்
மாவட்டத் துணைச் செயலாளர் : ஜெ. செந்தமிழன்.
பொதுக்குழு உறுப்பினர்கள்: ந.அன்பானந்தம், க. பதிஜெய்சங்கர்
காரைக்கால் மாவட்ட இளைஞரணி
தலைவர்: மு.பி. பெரியார் கணபதி.
செயலாளர் : ஆ . லூயிஸ் பியர்.
திராவிட மாணவர் கழகம்
தலைவர்: மோ. மோகன்ராஜ்.
செயலாளர்: அறிவுச்செல்வன்.
மாவட்ட மகளிர் அணி
தலைவர்: தி. அன்பரசி.
செயலாளர்: செ. சிறீதேவி
மாவட்ட மகளிர் பாசறை
தலைவர் : ப. தமிழ்ச்செல்வி.
விவசாய தொழிலாளர் அணி
அமைப்பாளர்: இராஜகோபால்.
விடுதலை வாசகர் வட்டம்.
அமைப்பாளர் : இரா . இராமலிங்கம்.
காரைக்கால் நகராட்சி 18 வார்டுகள்
காரைக்கால் நேருநகர் பகுதி திராவிடர் கழகம்
வார்டு 1 முதல் 8 வரை (8 வார்டுகள்)
பகுதி கழக தலைவர்: கா. ஜெயராமன்.
செயலாளர்: தி.கார்த்திகேசன்.
காரைக்கால் மதகடி பகுதி திராவிடர் கழகம்
வார்டு 9 முதல் 17 வரை ( 9வார்டுகள்)
பகுதி கழக தலைவர்: முகமது இப்ராஹிம்.
செயலாளர்: இரா. குணபாலன்.
கோட்டுச்சேரி கொம்யூன் திராவிடர் கழகம்
அமைப்பாளர் பொற்கோ (எ) செல்வராசு.
திருப்பட்டினம் கொம்யூன் திராவிடர் கழகம்
அமைப்பாளர்: பாலசுப்பிரமணியன்.
நிரவி கொம்யூன் திராவிடர் கழகம்
தலைவர் : மு . கருணாநிதி
செயலாளர் : செ. திராவிட மணி.
திருநள்ளாறு கொம்யூன் திராவிடர் கழகம்
தலைவர் : மா. கிருஷ்ணசாமி.
செயலாளர் : ச.பன்னீர்.
நெடுங்காடு கொம்யூன் திராவிடர் கழகம்
அமைப்பாளர்: பாரதி.