குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பை தமிழ்நாடு- அரசுப் பணியாளர்கள் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது. இதில் இணைய விரும்புபவர்கள் விண்ணப்பித்த படிவத்தின் நகல், ஆதார் அட்டை நகல், கடவுச் சீட்டு ஒளிப்படத்துடன் சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை வேலை நாள்களில் நேரடியாக அணுகலாம். மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற E-Mailஇல் தொடர்பு கொள்ளலாம்.