காந்தியவாதி, பெரியாரிஸ்ட், கம்யூனிஸ்ட் என பல முகங்களை கொண்டவர் தோழர் ஜீவானந்தம். ‘இந்தியாவின் சொத்து’ என காந்தியாரால் புகழப்பட்டவர். 1946 தொழிலாளர் போராட்டத்தில், ஒரு அடி முன்னே வைத்தால் சுடப்படுவீர்கள் என பிரிட்டிஷார் எச்சரித்தும், தனது மார்பை காட்டி முன்னேறிய தீரம் மிக்கவர். ஜாதி ஒழிப்பு போராட்டத்தால் கத்திக்குத்துக்கு உள்ளானவர். சமூக விடுதலைக்காக 10 ஆண்டுகள் சிறையில் கழித்த அவரை நினைவுகூர்வோம்.