அரூர் நகரில் தந்தை பெரியார் சிலை நிறுவ நடவடிக்கை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

Viduthalai
3 Min Read

அரசியல்

அரூர், ஜூலை 18- அரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.-7.2023ஆம் தேதி வெள்ளிக்கிழமை 12 மணி அளவில் திருவிக நகரில் உள்ள ராஜேந்திரன் மாலதி இல்லத்தில் நடைபெற்றது. 

கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் கு.தங்க ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூபதிராஜா வரவேற்பு உரையாற்றினார். மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி, கழக காப்பா ளர் அ.தமிழ்ச்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் வேங்கன் தமிழ்ச் செல்வன், அரூர் நகர தலைவர் வே. இராவணன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் த.மு. யாழ்திலீபன், மாவட்ட மாணவர் அணி தலைவர் இ. சமரசம், கடத்தூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ. அன்பழகன், பெரியார் பெருந் தொண்டர்  காந்தி என்கிற லோக நாதன் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.                                                                   .     

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு, சென்னையில் நடை பெற்ற தலைமை செயற்குழு  கூட் டத்தின்  முடிவுகளைப் பற்றியும், மாவட்டத்தில் செயல்படுத்தும் பணிகள் குறித்து தலைமை கழக அமைப்பாளர் பழ. பிரபு  தொடக்க உரையாற்றினார். 

தலைமை செயற்குழு தீர்மானத் தின் அடிப்படையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிறுத்தி தெரு முனை கூட்டங்களையும், பொதுக் கூட்டங்களையும்   வாய்ப்புள்ள இடங்களில் கழகக் கொடிகளை  ஏற்றுவது குறித்து மாநில பகுத் தறிவுக் கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, கிராமங்கள் தோறும் அமைப்புகளை ஏற்படுத் துவது, பகுத்தறிவாளர்  கழகத்திற்கு உறுப்பினர் சேர்ப்பது, தமிழர் தலைவர் கூறியபடி ஊருக்கு ஒரு செடி, கொடி, படி  என்ற அடிப் படையில் நடைமுறைப்படுத்துவது குறித்து கட்சியினர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக தலைவர் சா. ராஜேந் திரன் சிறப்புரையாற்றினார்.

ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்குழு, சென்னையில் நடை பெற்ற தலைமை செயற்குழு கூட்ட முடிவினை மாவட்ட திராவிட கழகம் செயல்படுத்துவது எனவும், தருமபுரி மாவட்ட திராவிடர் கழக கோட்டையாக திகழ்ந்த அரூர் நகரில் தந்தை பெரியார் சிலை நிறுவ  தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், சிலை அமைப்பதற்கான  இடத்தை ஒதுக்கித் தருமாறு மாவட்ட திராவிட கழகத்தின் சார் பில் கேட்டுக் கொள்வது எனவும், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், கடத் தூர், மொரப்பூர் ஒன்றியங்களில் கலந்துரையால் கூட்டத்தைக் கூட்டி மாவட்ட தலைமையின் முடிவை செயல்படுத்த வேண்டும் எனவும்,  ஆகஸ்ட் மாதம் ஒன்றிய கழகத்தின் சார்பில் பாப்பிரெட்டிப் பட்டியிலும், மொரப்பூர் ஒன்றிய பகுத்தறிவாளர்  கழகத்தின் சார் பில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அரூர் நகரில் அனைத்து கட்சியினர் பங் கேற்கும்  வகையில் ஊர்வலம் மற் றும் பொதுக் கூட்ட நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது எனவும், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பயர் நத்தம் கிராமத்தில் கொடி யேற்றி தெருமுனை கூட்டமும், வெங்கடசமுத்திரத்தில் ஊர்வலம் நடத்தி தெருமுனை கூட்டத்தையும்    வேப்பிலைப்பட்டியில் திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழ கம் சார்பில் பொதுக்கூட்டம் நடத் துவது எனவும் முடிவு செய்யப் பட்டது.

திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் பெ.அன் பழகன், ஆ. இளங்கோ, வெ.இராவ ணன் சோலை துரைராஜ், வேப்ப நத்தம் கல்பனா, மு.சிறீதரன், இரா.ஆனந்தன், அய்யனார், சூர்யா, சாய்குமார், கிருஷ்ணமூர்த்தி, பில வேங்கன், இரா.மகிருஷ்ணன், பிரேம் குமார், வேலாயுதம், குமரேசன், திராவிட சக்தி,மணிமேகலை உள் ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்ற னர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *