நாகர்கோவில், ஜூலை 18- திராவிடர்கழக நாகர்கோவில் மாநகர கலந்துரை யாடல் கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
கழக மாநகர செயலாளர் மு.இராஜசேகர் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்கவுரை யாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் சிறப்புரை யாற்றினார். கழக மாநில சொற்பொழி வாளர் இரா. பெரியார் செல்வம் கருத்துரை யாற்றினார்.
குமரி மாவட்ட தலைவர் மா. மு.சுப்பிரமணியம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவ தாணு, கழக காப்பாளர் ஞா.பிரான் சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றினார்கள். மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், செயலாளர் எஸ். அலெக்சாண்டர், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார் தாஸ், தோவாளை ஒன் றிய கழக தலைவர் மா.ஆறுமுகம், மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் இரா.கோகுல், தோழர்கள் மு.இராஜன் மற்றும் பலரும் பங்கேற்றனர்.
தலைமைச் செயற்குழு தீர்மா னங்களை முழுமனதாக வரவேற்று செயல் படுத்துவது, கழக மாநகர , கிளைக்கழக அமைப்புகளை வலுப் படுத்துவது, மாநகரம் முழுமையாக கழகக் கொடியேற்றுவிழா நடத்து வது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட
புதிய பொறுப்பாளர்கள்
வடசேரி பகுதி தலைவர் பா.சு. முத்துவைரவன், செயலாளர் மு.இராஜன், பார்வதிபுரம் பகுதி தலைவர் ம.செல்வராசு, செயலா ளர் தி.ஞானவேல், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை, செயலாளர் பொன். எழில் அரசன், இராமன்புதூர் பகுதி தலைவர் பி.கென்னடி, செயலாளர் த.சுரேஷ்.