இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஊர்களின் பெயர்களை ஹிந்துமயமாக்கல் என்பதுதான் மத்தியப் பிரதேச முதலமைச்சரின் முக்கியமான வேலையாம்.
மத்தியப் பிரதேசத்தில் 11 கிராமங்களின் பெயர்கள் மாற்றப்படவுள்ளன. மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் சமீபத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மத்தியப் பிரதேசத்தின் பல கிராமங்களின் பெயர்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் ஊர்களாகும்.
ஆகவே, அந்த ஊர்கள் இஸ்லாமிய பெயர்களால் பல நூற்றாண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக உள்ளூர் ஹிந்துத்துவ அமைப்புகள் இது இந்தியாதான் பாகிஸ்தான் அல்ல, இது ஹிந்துக்களின் பூமி என்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல ஊர்களின் பெயர்களைக் கேட்டால் பாகிஸ்தானில் இருப்பது போன்ற உணர்வு உள்ளது என்றும் முதலமைச்சரிடம் எழுத்து மூலம் புகார் அளித்துள்ளனர்,
அதில் குறிப்பிட்ட ஊர்களை உடனடியாக மாற்ற முதலமைச்சர் உத்தரவிட்டார். ஹிந்து அமைப்புகள் பரிந்துரைத்த பெயரையே அப்படியே சூட்டவும் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து உஞ்சோத் என்பது உஞ்சவத் ஆக மாற்றப்பட்டது – முகம்மத்பூர் மச்சானை என்பது மோகன்பூர் ஆக மாற்றப்பட்டது – தப்லா ஹுசைன்பூர் என்பது தப்லா ராம் ஆக மாற்றப்பட்டது – சேக் புர் போங்கி என்பது அவத்புரி ஆக மாற்றப்பட்டது – கஜூரி அலாதத் என்பது கஜூரி ராம் ஆக மாற்றப்பட்டது – ஹாஜிபூர் என்பது ஹீராபுர் ஆக மாற்றப்பட்டது – ரீட்சி முராதாபாத் என்பது ரிச்சடி ஆக மாற்றப்பட்டது – முகம்மத்பூர் பவாடியா என்பது ராம்பூர் பவாடியா ஆக மாற்றப்பட்டது.
கட்டி முக்தியார்பூர் என்பது கட்டி ஆக மாற்றப்பட்டது கலீல்பூர் என்பது ராம்பூர் ஆக மாற்றப்பட்டது நிபானியா ஹிஸாமுத்தின் என்பது நிபானியா தேவ் ஆக மாற்றப்பட்டது இது தொடர்பாக முதலமைச்சர் மோகன் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கிராமங்களின் பெயர் மாற்றம் உள்ளூர் மக்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாக இருந்தது என்று கூறினார்.
உள்ளூர் மக்கள் தற்போதைய பெயர்களால் மிகவும் உற்சாகமைடந்துள்ளனர், இதில் கவலை கொள்ளும் அல்லது வருத்தப்படும் பிரிவினரை கவனித்துக் கொள்வது தனது கடமை என்று அவர் கூறினார், “சில பெயர்கள் மக்களுக்கு விருப்பமில்லாதவை என்று மக்கள் கவலை தெரிவித்தபோது, அவற்றை சரிசெய்வது எனது பொறுப்பாகும் என்று நான் உணர்ந்தேன்.
முகம்மத்பூர் மச்சானையில் முகம்மது பிறந்தாரா? இல்லை என்றால், அப்படியான பெயரை ஏன் வைத்திருக்க வேண்டும்? இனி முகமது என்ற பெயர் தேவையில்லை ஆகவே மாற்றிவிட்டோம், இனி நமது அடையாளமே முக்கியமாகும்.
புதிய பெயர்கள் இந்தியாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டவை என்று குறிப்பிட்டார். இதில் 33 கோடி தெய்வங்கள் உள்ளன. எனவே, புதிய பெயர்கள் அவற்றில் எதையும் வைக்கலாம்.
இதற்கு முன்பு உஜ்ஜைன் மாவட்டத்தில் மூன்று கிராமங்களின் பெயர்களை மாற்றியிருந்தார், அதில் கஜ்னிகேடி பஞ்சாயத்து என்பதை சாமுண்டா மாதா கிராமமாக, ஜஹாங்கிர்பூர் ஜகதீஷ்பூர் ஆகவும், மவுலானா கிராமம் விக்ரம் நகர் ஆகவும் மாற்றப்பட்டது. மத்தியப் பிரதேச அரசின் கிராமங்களின் பெயர் மாற்றம், உள்ளூர் மக்களின் விருப்பங்கள் மற்றும் பாரம்பரியங்களை மதிப்பதற்கும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் மாநிலத்தின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. கலாச்சார மதிப்புகளுடன் பெயர்களை மாற்றுவதன் மூலம், நிர்வாகம் மாநிலத்தின் கலாச்சார மற்றும் நமது அடையாளத்தை பாதுகாக்கும் நோக்கில், அதன் இந்த மண்ணின் மக்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் முக்கியமான நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.