சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் வள்ளுவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை,ஜன.16- சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் வள்ளுவர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஒடிசாவில் பூரி கடற்கரையில் வரையப்பட்ட திருவள்ளுவரின் பேரறிவு சிலையின் மணற் சிற்பத்தை மேற்கோள் காட்டி வெளியிட்ட எக்ஸ்தள பதிவில், சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் வள்ளுவர்.

“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்.
இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்
ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

சென்னை,ஜன.16- ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார் என ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார்.

வண்ணை நகர் கல்மண்டபம் சந்திப்பு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஆன்மீக அரசியல்

திருவள்ளுவர் நாளை முன்னிட்டு திமுக வர்த்தக அணி சார்பில் மாநிலத் துணைச் செயலாளர் பாண்டி செல்வம் தலைமையில் வண்ணை நகர் கல்மண்டபம் சந்திப்பு அருகில் திருவள்ளுவர் சிலை அமைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை அடுத்து திருக்குறள் புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர். பின்னர், செய்தியாளர்களிடம பேசிய ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:

ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார். அவர் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்ய வந்துள்ளார், வியாபாரம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆன்மீகத்தை வைத்து எத்தனை தடை கற்கள் போட்டாலும் படிக்கற்களாக மாற்றி திமுக வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *