கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.1.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* யு.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு அகில இந்திய பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு. திரும்பப் பெற வலியுறுத்தல்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ராமர் கோயில் கட்டிய பிறகே உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்கிற ஆர்எஸ்எஸ் தலைவரின் பேச்சு தேச துரோகம்: காங். தலைமையகம் திறப்பு விழாவில் ராகுல் ஆவேசம்; இந்திய அரசமைப்புக்கு எதிராக போராடுவதாக பரபரப்பு பேச்சு

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆர்.எஸ்.எஸ். தலைவரின் சுதந்திர பேச்சுக்கு, இதுபோன்ற அறிக்கைகளை அவர் தொடர்ந்து வெளியிட்டால் நாட்டில் நடமாடுவது கடினமாகி விடும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எச்சரிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இருக்கும், ராம் விலாஸ் பாஸ்வானின் சகோதரர் பசுபதி பராஸ் பீகார் மகா கூட்டணியில் சேர லாலு ஆதரவு.

* யுஜிசியின் புதிய விதிமுறைகளை எதிர்த்து போராட கேரள அரசு மற்ற மாநிலங்களை அணிதிரட்ட முடிவு.

தி இந்து:

* 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளில் செய்யப்பட்ட திருத்தம், குடிமக்களின் தேர்தல் தொடர்பான பதிவுகளை அணுகும் உரிமையை கட்டுப்படுத்துவதற்கு சமமானது என்பதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் (EC) பதில்களைக் கோரியது.

* ஒன்றிய ரயில்வே அமைச்சர் பல்டி: மதுரை தூத்துக்குடி இடையே ரயில்வே வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் மாநில அரசின் கோரிக்கையால் கைவிடப்பட்டதாக” கூறிய நிலையில், தற்போது, மதுரை-தூத்துக்குடி புதிய பாதைத் திட்டம் கிடப்பில் போடப்படவில்லை என விளக்கம்.

* ‘கருநாடக மேனாள் முதலமைச்சர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது’, கர்நாடகா உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.

* விவசாயத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் சாகும் வரையிலான பட்டினிப் போராட்டம் 51ஆவது நாளை எட்டிய நிலையில், பஞ்சாபின் கனௌரியில் தங்கள் கோரிக்கைகளை ஆதரிக்க 111 விவசாயிகள் கொண்ட குழு காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கியது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *