ஜெயங்கொண்டம், ஜன. 16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரத்தில் திராவிடர் கழகம் சார்பில் எருமை மாடுகளுக்கு சிறப்பு (15.1.2025) செய்து மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மாட்டுப் பொங்கலின் போது பசு மற்றும் காளை மாடுகளை மட்டுமே கொண்டாடுகிறார்கள். எருமை மாடுகளை ஒதுக்கும் போக்கு கடந்த பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.
எருமை மாடுகளை ஒதுக்குவது வர்ணபேதம் என்றும், மக்களுக்கு பயனளிக்கும் எல்லா மாடுகளையும் ஒன்றாகக் கருதி கொண்டாட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை வெளியிட்டார்.
இதனையொட்டி, திராவிடர் கழகத்தினர் எருமைப் மாட்டுப் பொங்கலை செங்குந்தபுரத்தில் ஏற்பாடு செய்து நடத்தினர்.
சட்ட மன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், தலைமை செயற் குழு உறுப்பினர் க.சிந்தனை செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் உள்ளிட்ட கழகம், திமுகவினர் மற்றும் செங்குந்தபுரம் ஊர் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
எருமை மாடுகளுக்கு மாலை அணிவித்து பொங்கல் ஊட்டி கொண்டாடினர்.
கொண்டாடுவோம் கொண்டாடு வோம் சமத்துவப் பொங்கல் கொண்டாடுவோம். திராவிடப் பொங்கல் கொண்டாடுவோம். வேண்டாம் வேண்டாம் மாடுகளுக் குள் பேதம் வேண்டாம்.
வேண்டும் வேண்டும் சமத்துவம் வேண்டும் என்று முழக்க மிட்டார்கள்.
இந்நிகழ்வில், கழக ஆண்டிமடம் ஒன்றிய அமைப்பாளர் டெய்லர் பாண்டியன், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ஆ. ஜெயராமன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் மா. கருணாநிதி, வழக்குரைஞர் சா. பகுத்தறிவாளன், வழக்குரைஞர் சிந்தனை வளவன், ஒன்றிய இளைஞரணி தலைவர் கா. பெரியார் செல்வன், ஒன்றிய அமைப்பாளர் லெ. அர்ச்சுணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.