கடலூர், ஜூலை 19 – தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு ஒளிப்படத்தை வெளியிட்ட கடலூர் மாவட்டம் கீரப் பாளையம் பாஜக தகவல் தொழில் நுட்பப் பிரிவு (அய்டி விங்) நிர்வாகி ஜெயக்குமாரை நெல்லை காவல் துறை கைது செய்து அழைத்துச் சென்றனர். கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஜெயக் குமார்(33).
இவர் கீரப்பாளையம் ஒன்றிய பா.ஜ.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவராக உள்ளார். அண்மையில் இவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச் சரை அவதூறாக சித்தரித்து ஒளிப் படத்தை வெளியிட்டிருந்தார். இந்தப் ஒளிப்படத்தைப் பார்த்த திருநெல்வேலி தி.மு.க.வினர், இது குறித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரி டம் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரினை வழக்காகப் பதிவு செய்த திருநெல்வேலி காவல் துறையினர் (17.7.2023) அன்று இரவு கடலூர் மாவட்ட காவல் துறையினர், கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப் பாளையத்தில் இருக்கும் பா.ஜ.க. அய்டி விங் நிர்வாகி ஜெய்குமாரை கைது செய்ய வந்து கொண்டிருப்ப தாக தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சிதம்பரம் நகர காவல் உதவி ஆய்வாளர் பரணி தரன் தலைமையிலான சிறப்புப் படை உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் மற்றும் காவலர் ஜெய் குமார் வீட்டுக்கு ஜூலை.18 அதிகாலையில் சென்று அவரை அழைத்துச் சென்றனர்.
பின்னர் சிதம்பரத்தில் முகா மிட்டிருந்த திருநெல்வேலி காவ லர்களிடம் அவரை ஒப்படைத் தனர். பிடிபட்ட ஜெய்குமாரை கைது செய்த திருநெல்வேலி காவல் துறை தற்பொழுது அவரை திருநெல்வேலிக்கு விசாரணைக் காக அழைத்துச் சென்று உள்ளனர். அடுத்தடுத்து பா.ஜ.க.வினர் தொடர்ந்து அவதூறு கருத்துகள் பதிவிட்டதற்காக கைது செய்யப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.