சட்டப்பேரவையில் முதலமைச்சர் கேள்வி
சென்னை, ஜன. 13- தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது 11.1.2025 அன்று முதலமைச்சர் பதில் அளித்தார்.
அதில், அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்பட்டார். பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டார். தமிழ்நாடு வளர்ந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை என தெரிகிறது.
தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளில் தருவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்று உள்ளது.
அது என் இயல்பும் கூட!
தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தும் உரிமை இல்லை என்று சிலர் தவறான வாதங்களை வைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், ‘அளவுக்கு மீறிய ஜனநாயகவாதி’ என்று சிலர் என்னை விமர்சிக்கிறார்களே தவிர, நான் சர்வாதிகாரியாக உள்ளதாக யாரும் சொல்லமாட்டார்கள்; அது என் இயல்பும் கூட! எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளும் போராட்டம் நடத்தலாம் என்று சொல்பவன் நான். போராட்டம் தவறு கிடையாது. போராட்டம் நடத்த வேண்டிய இடத்தில் போராடுவது தவறு இல்லை. போராட்டம் நடத்த உரியகாலத்தில் அனுமதி கேட்டால் கொடுத்து உள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து உள்ளோம்.
சட்டம் – ஒழுங்கு
எனது தலைமையிலான அரசில் காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள் மீது தயவுதாச்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொலைகள், ரவுடிகள் தொடர்புடைய சாதிய கொலை சம்பவங்கள் குறைந்து உள்ளது. எங்கும் அமைதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. மீறி குற்றம் நடந்தால் குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். குற்றவாளிகளுக்கு சலுகைகள் கிடையாது.
முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது
பெரும்பான்மையான கொலைகள் குடும்ப பிரச்சினை, காதல் விவகாரம், பணம் கொடுக்கல் வாங்கல், நிலப் பிரச்சினை, தனிப்பட்ட முன் விரோதம் உள்ளிட்ட காரணங்களால் நடந்து உள்ளது. அரசியல் காரணங்கள், ஜாதியக் கொலைகள், மதரீதியான கொலை, ரவுடிக் கொலைகள் திமுக ஆட்சியில் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு உள்ளது.
கருப்புச் சட்டை விவகாரம்
எதிர்க்கட்சியை சேர்ந்த அதிமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து வரும் போது எனக்கு கோபம் வரவில்லை, சிரிப்புதான் வந்தது. இப்படியாவது கருப்புச் சட்டை அணிகிறார்கள் என்று மகிழ்ச்சி அடைந்தேன். மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில சட்டமன்றத்தை மதிக்காமல் ஆளுநர் உள்ளார். அவரை கண்டித்து ஏன் கருப்புச் சட்டை அணிவது இல்லை என்பதுதான் எனது கேள்வி. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தராத ஒன்றிய அரசை கண்டித்து கருப்புச் சட்டை அணிந்து இருந்தால் நான் வாழ்த்தி இருப்பேன் என கூறி உள்ளார்.
பாலியல் வழக்குகளில் சட்ட திருத்தம்
தமிழ்நாடு அரசுக்கு ஓ.பி.எஸ். பாராட்டு
அவனியாபுரம், ஜன. 13- சென்னையில் இருந்து மதுரை வந்த மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெண்களுக்கு எதிரான வழக்குகளில் தண்டனை குறித்த சட்டத் திருத்தம் வரவேற்கத்தக்கது. இது பெண்களுக்கு எதிரான அனைத்து குற்ற நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வழிவகுக்கும். ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தே.ஜ. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் கலந்து பேசி முடிவெடுப்போம்.
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக முதலில் குரல் கொடுத்தவர்கள் அதிமுக உரிமை மீட்புகுழுவினரான நாங்கள் தான். எனவே, எந்த ரூபத்தில் வந்தாலும், அதை தடுத்து நிறுத்தும் இயக்கமாக நாங்கள் இருப்போம் என்று கூறினார்.
பார்ப்பனக் குசும்பு
பொங்கலன்று கேந்திரிய வித்யாலயா தேர்வுகளா?
சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
மதுரை, ஜன. 13- “கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு திருவிழா கால விடுமுறையை கொண்டாட முடியாத உளவியல் தாக்குதலையும், தமிழ்ப் பண்பாட்டின் மீதான ஒவ்வாமையையும் ஒருசேர வெளிப்படுத்தும் செயல் இவை. இந்த தேர்வுகள் அனைத்தையும் மறு தேதிக்கு மாற்றுக என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.
ஏற்கெனவே நெட் தேர்வுகளை பொங்கல் அன்று வைத்துள்ளனர். இதற்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்து தேதியை மாற்றக்கோரியுள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கலன்று தேர்வுகளை அறிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மணலி, பெருங்குடி தவிர…
சராசரி அளவில் காற்றின் தரக் குறியீடு!
சென்னை, ஜன.13- தை முதல் நாளில், தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் நாளை (14.1.2025) முதல் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற முறைப்படி மார்கழியின் கடைசி நாளான இன்று (ஜன. 13) போகி கொண்டாடப்பட்டது.
அதிகாலை முதலே வீட்டில் உள்ள பழைய பொருள்களை எரித்தும், சிறுவர்கள் மேளம் அடித்தும் போகியை உற்சாகமாகக் கொண்டாடினர்.
புகையில்லா போகியைக் கொண்டாட வேண்டும் என டயர், ரப்பர் பொருள்கள் போன்றவற்றை எரிக்க வேண்டாம் என சென்னை மாநகராட்சி சார்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், போகி நாளான இன்று மணலியில் காற்றின் தரக் குறியீடு வழக்கத்துக்கு மாறாக 97ஆகவும், பெருங்குடியில் 83ஆகவும் இருந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்த நானா சர்வாதிகாரி?
சட்டப்பேரவையில் முதலமைச்சர் கேள்வி
சென்னை, ஜன. 13- தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது 11.1.2025 அன்று முதலமைச்சர் பதில் அளித்தார்.
அதில், அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் செயல்பட்டார். பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்பட்டார். தமிழ்நாடு வளர்ந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை என தெரிகிறது. தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளில் தருவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்று உள்ளது.