செ.க.கனல் படத்திறப்பு-நினைவேந்தல்
கடலூர், ஜன. 13- கடலூர் மாவட்டம். திட்டக்குடி வட்டம். தொளார். மறைந்த செல்வம். செ.கமலாதேவி ஆகியோரின் மகன்.
செல்வன். செ.க.கனல்ராஜ் மறைவையெட்டி அவரது நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி. தொளார் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில். 11.01.2025 சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
கழக பேச்சாளர், புலவர்.வை.நாத்திகநம்பி நிகழ்ச்சிக்கு தலைமையேற்று படத்தினை திறந்து வைத்தார். தொளார்
மு. ஊராட்சி ம.தலைவர். தெய்வ.அருள்மணி வரவேற்று பேசினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாநிலத் தலைவர்.
எஸ்.வாலண்டினா விருத்தாசலம் கழக மாவட்ட தலைவர்
த.சீ.இளந்திரையன். அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை.நீலமேகன், காப்பாளர் சு.மணிவண்ணன், அரியலூர் மா.கழக துணைச் செயலாளர் பொன்.செந்தில்குமார். பொதுக்குழு உறுப்பினர் தங்க. இராசமாணிக்கம் ஆகியோர் இரங்கலுரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே. மறைந்த கனல்ராஜின் தாயார். செ.கமலாதேவி. அண்ணன் சுரேஷ். தங்கை அபிநயா அகியோருக்கு ஆறுதல் கூறும் விதமாகவும். இம்மாதிரியான சுயமரியாதை படத்திறப்பு நிகழ்ச்சியினை தந்தை பெரியார் அவர்கள் ஏன் வலியுறுத்தினார்கள் என்பதையெல்லாம் விளக்கி பேசினர்.
மா.சங்கர் அரியலூர் மா. விவசாய அணி தலைவர். சி.கருப்புசாமி அரியலூர் மா.தொழிலாளர் அணி அமைப்பாளர். மு.முத்தமிழ்ச்செல்வன் செந்துறை ஒன்றிய தலைவர். இராசா.செல்வக்குமார் ஒன்றிய செயலாளர். சோ.க.சேகர் ஒன்றிய அமைப்பாளர். தி.சுப்ராயன் ஒ.து.தலைவர். விருத்தாசலம் சிலம்பரசன் போன்ற தோழர்களும். உறவினர்களும் பங்கேற்றிருந்தனர். நிறைவாக செந்துறை மதியழகன் நிகழ்ச்சிக்கு நன்றி கூறினார்.