பொதுத்துறையை சேர்ந்த தேசிய உர நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
காலியிடம்: அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட் 15, மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் மார்க்கெட்டிங் 60, எப் & ஏ 10, சட்டம் 4 என மொத்தம் 89 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: அக்கவுன்ட்ஸ் பணிக்கு பி.காம்., மார்க்கெட்டிங் பிரிவுக்கு எம்.பி.ஏ.,எப் & ஏ பிரிவுக்கு சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ., சட்டம் பிரிவுக்கு சட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது: 31.10.2023 அடிப்படையில் அக்கவுன்ட்ஸ் பணிக்கு 18 – 30, மற்ற பணிக்கு 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
தேர்வு மய்யம்: சென்னை, கொச்சி, அய்தராபாத் உட்பட 13 இடங்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: அக்கவுன்ட்ஸ் பணிக்கு ரூ. 200. மற்ற பணிக்கு ரூ. 700. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 1.12.2023
விவரங்களுக்கு: careers.nfl.co.in