கண்டாச்சிபுரம், ஜன13 விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கண்டாச்சிபுரம் பால்காரர் ஏழுமலை மேடையில், கழக கொள்கை விளக்கப் பிரச்சாரக் கூட்டம் மற்றும் வைக்கம் போராட்ட வீர வரலாறு விளக்கக் கூட்டம் 9.1.2025 அன்று மாலை ஆறு மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை நகர கழக தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர் ஏழுமலை வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் கோபண்ணா, மாவட்ட செயலாளர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சவுரிராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட விவசாய அணி செயலாளர் கண்ணாயிரம், கழக அமைப்பாளர் இளம்பரிதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் துரை.திருநாவுக்கரசு, செஞ்சி கா.திருநாவுக்கரசு, மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ், மாவட்ட இளைஞரணி பொருளாளர் வசந்தகுமார், வேட்டவலம் ஏழுமலை, வேட்டவலம் திருமலை, தலவனூர் கிருஷ்ணமூர்த்தி,செஞ்சி சங்கர், செஞ்சி நந்தகுமார், வடலூர் முருகன், வடலூர் மோகன், விழுப்புரம் கவுதமன், கோமதி, அனிதா, கண்டாச்சிபுரம் கவுதமன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.
வடலூர் புலவர் ராவணன், வேட்டவலம் பட்டாபிராமன், ஆகியோர் உரையாற்றியதை அடுத்து, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தந்தை பெரியாரின் அருமை பெருமைகள் குறித்தும், அளப்பரிய தொண்டு பற்றியும், இணையில்லா ஈகம் பற்றியும் விளக்கி உரையாற்றினார்.
பகுத்தறிவு, சமத்துவம், ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, பெண் விடுதலை, சமதர்மம் ஆகியவற்றுக்குப் பெரியாரின் இணையில்லா பங்களிப்பு குறித்தும், வைக்கம் போராட்டத்தின் வீர வரலாறு பற்றியும் அருமையாக விளக்கி ஒன்றரை மணி நேரம் சிறப்புரையாற்றினார்.
நிறைவாக செயலாளர் முருகன் நன்றி கூறினார்.