உலகின் மிக வெப்பமான ஆண்டு 2024!

2 Min Read

கடந்த 2024ஆம் ஆண்டுதான் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக வெப்பமான ஆண்டு என்று பன்னாட்டு வானிலை அமைப்புகள் தெரிவித்தன.

மேலும், தொழில் புரட்சிக்கு முன்பிருந்ததை விட 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் (2.7 டிகிரி ஃபாரன்ஹீட்) மட்டுமே புவியின் வெப்பம் அதிகமாக இருக்க வேண்டும் என்ற 2015 பருவநிலை ஒப்பந்த வரம்பு கடந்த ஆண்டில் முதல்முறையாக மீறப்பட்டுள்ளது.

புவியின் சராசரி வெப்பநிலை கடந்த 2023-ஆம் ஆண்டில்தான் மிக அதிகபட்ச அளவில் பதிவு செய்யப்பட்டது. இந்தப் போக்கு கடந்த ஆண்டும் தொடா்ந்து, சராசரி வெப்பநிலை மேலும் அதிகரித்துள்ளது வானிலை ஆய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள தரவுகள் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 1800-களில் இறுதியில் தொழில்புரட்சி தொடங்கியதற்கு முன்பிருந்த புவியின் வெப்பநிலைக்கும் தற்போதைய வெப்பநிலைக்கும் இடையிலான வேறுபாட்டை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று பாரிஸ் நகரில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஒப்புக்கொண்டன.
இந்த நிலையில், கடந்த ஆண்டில் புவியின் வெப்பநிலை 1.6 டிகிரி செல்ஷியஸ் (2.89 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை அதிகரித்ததாக அய்ரோப்பிய யூனியனின் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜப்பான் வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புவியின் வெப்பநிலை கடந்த 2024-இல் தொழில்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.57 டிகிரி செல்ஷியஸ் (2.83 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை அதிகரித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புவியின் வெப்பம் கடந்த ஆண்டில் 1.53 டிகிரி செல்ஷியஸ் (2.75 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை உயா்ந்ததாக பிரிட்டன் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது.

1800-ஆம் ஆண்டுகளில் வெப்பத்தை அளவிடும் முறையில் மாற்றங்கள் இருந்ததால் வெவ்வேறு வானிலை ஆய்வு அமைப்புகளின் தரவுகளில் சிறு வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அந்த ஆய்வு அமைப்புகளின் நிபுணா்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாகவே அதிக வருடாந்திர வெப்பநிலை பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், அது கடந்த 1.25 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலையாக இருக்கும் எனவும் தெரிவித்தனா்.

புவியின் வெப்பநிலை அதிகரிப்பதில் நிலக்கரி, டீசல், பெட்ரோல், எரிவாயு போன்ற படிம எரிபொருள்களை எரிப்பதால் காற்றில் கலக்கும் கரியமில வாயு மிகப் பெரிய பங்கு வகிப்பதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *