குரூப் 4 தேர்வின் வினாக்களுக்கான இறுதி விடை குறிப்பை முதல் முறை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப் பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியான பின்னரே விடை குறிப்பு வெளியாகும். ஆனால், இந்த முறை குரூப் 4 விடை குறிப்பு முன்னேரே வெளியிடப்பட்டதால், மதிப்பெண்களை தேர்வர்கள் எளிதாக கணக்கிட முடியும். இனிவரும் காலங்களில் மற்ற தேர்வுகளுக்கும் இதேபோல் வெளியிட வேண்டும் என்று தேர்வர்களின் விருப்பமாக உள்ளது.