பெங்களுரு, ஜூலை 19 பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்ற சில வாரங்களுக்குப் பிறகு, பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஜூலை 17, 18 தேதிகளில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. வருகிற மக்களவைத் தேர்தலுக்கான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ‘இந்தியா’ ((INDIA – இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு மிழிஞிமிகி INDIA (Indian National Developmental Inclusive Alliance) இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டணியின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப் பாளர்கள் குழு அமைக்கப்பட இருப்பதாகவும், குழு உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு அப்போது வெளியாக உள்ளதாகவும் தெரிவித்தார். 2024 பொதுத்தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்பது என்ற ஒற்றை இலக்குடன் 26 கட்சிகள் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த இரண்டு நாள்களாக பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி இறுதி செய்யப்பட்டதை அடுத்து மிழிஞிமிகி என்று இந்த கூட்டணிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான, ஒன்றியத்தில்ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (என்.டி.ஏ) எதிர்கொள்ள, நாடு முழுவதும் உள்ள, 26 எதிர்க்கட்சிகளின் உயர் மட்டத் தலைவர்கள், பெங்களூருவில் கூடி ஆலோ சனை நடத்தியதால்தான் இந்த வளர்ச்சி, மாற்றம் ஏற்பட்டுள்ளது.
“அரசமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள இந்தியா என்ற கருத்தைப் பாதுகாப்பதற்கான” அவசியத்தை 26 கட்சிகளின் தீர்மானம் குறிப்பிடுகிறது. “இந்திய அரசமைப்பின் அடிப்படைத் தூண்களான மதச்சார்பற்ற, ஜனநாயகம், பொருளாதார, இறை யாண்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி ஆகியவை முறையாகவும் அச்சுறுத்தும் வகையிலும் சிதைக்கப் படுகின்றன” என்று அந்த ஆவணம் கூறுகிறது.
“அரசியல் போட்டியாளர்களுக்கு எதிராக ஒன்றிய பா.ஜ.க அரசு “ஒன்றிய முகமைகளை தவ றாகப் பயன்படுத்துகிறது. பா.ஜ.க அல்லாத ஆளும் மாநிலங்களின் தேவைகளை புறக்கணிக்கிறது” என்று அந்த ஆவணம் கூறுகிறது. மேலும், மணிப்பூரில் மனிதாபிமான மற்ற துயரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை எப்போதும் உயர்ந்து வரும் கடுமையான பொருளாதார நெருக் கடி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் பற்றிய கவலைகள் குறித்தும் எழுப்பப்பட்டு விவாதிக்கப் பட்டன.
“சிறுபான்மையினருக்கு எதிராக உருவாக்கப்படும் வெறுப்பு மற்றும் வன்முறையைத் தோற்கடிக்க நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்; பெண்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களை நிறுத்த வேண்டும்; சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சமூகங்களிடமும் நியாயமான முறையில் கோரிக்கைகளை கேட்பதுடன் முதல் கட்டமாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும்” என, ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.
கட்சிகள் பங்கேற்பு
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், ஆம் ஆத்மி கட்சி, அய்க்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், தனித்தனியாகவோ அல்லது கூட்டணியாகவோ டில்லி மற்றும் 10 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளனர். உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய லோக் தளம், அப்னா தளம் (காமராவாடி), ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (எம்), கேரள காங்கிரஸ் (ஜோசப்) ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
கூட்டறிக்கை
சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் பாஜக-வை எதிர்த்து தீவிரமாக களமிறங்கப்போவதாக மி.ழி.ஞி.மி.கி கூட்டணி தலைவர்கள் கூட்டறிக்கை.
பெங்களூருவில் நடைபெற்ற 26 கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு மி.ழி.ஞி.மி.கி (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) கூட்டணியின் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தியாவின் 26 முற்போக்குக் கட்சிகளின் தலை வர்களான நாங்கள், அரசியமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியா என்ற கருத்தைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதியான தீர்மானத்தை வெளிப்படுத்துகிறோம்.
நமது குடியரசின் தன்மை பாஜகவால் திட்டமிட்ட முறையில் கடுமையாக தாக்கப்பட்டு வருகிறது. நாம் நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப் படைத் தூண்களான மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி ஆகியவை முறையான மற்றும் அச்சுறுத்தும் வகையில் சிதைக்கப்படுகின்றன.
மணிப்பூரை அழித்த மனிதாபிமான துயரம் குறித்து எங்களின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத் துகிறோம். பிரதமரின் மவுனம் அதிர்ச்சியளிக்கிறது மற்றும் முன்னெப்போதும் இல்லாதது. மணிப்பூரை மீண்டும் அமைதி மற்றும் நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வருவதற்கான அவசரத் தேவை உள்ளது.
அரசமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந் தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக் குதலை எதிர்த்துப் போராடவும், எதிர்கொள்ளவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நமது அரசியலின் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்த திட்டமிட்ட முயற்சி நடக்கிறது.
பா.ஜ.க. அல்லாத ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களின் பங்கு அனைத்து அரசமைப்புச் சட்ட விதிமுறை களையும் மீறியுள்ளது. அரசியலில் எதிர்க்கருத்து உடையவர்களின் குரல்வளையை நெரிக்க அரசு நிறுவனங்களை பாஜக ஏவி வருவதுடன் நமது ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் நியாயமான தேவைகள் மற்றும் உரிமைகள் ஒன்றிய அரசால் தீவிரமாக மறுக்கப்படுகின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்வதற்கான எங்கள் உறுதியை நாங்கள் வலுப்படுத்துகிறோம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது சிறு குறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புசாரா துறைகளுக்கு சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியது, இதன் விளைவாக நமது இளைஞர்களிடையே பெரிய அளவில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள் ளது. தேசத்தின் சொத்துக்கள் அனைத்தும் பொறுப் பற்ற நண்பர்களுக்கு பாஜக அரசு விற்பதை நாங்கள் எதிர்க்கிறோம்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், தனியார் துறையுடன் இனைந்து வலுவான பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதுடன் பொருளாதாரத்தை கட்டி யெழுப்ப வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. சிறுபான்மையினருக்கு எதிராக உருவாக்கப்படும் வெறுப்பையும், வன்முறையையும் தோற்கடிக்க நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்; பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் காஷ்மீரி புரோகிதர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களை நிறுத்த வேண்டும்; சமூக, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சமூகங் களுக்கும் நியாயமான விசாரணையைக் கோருதல்; மற்றும், முதல் கட்டமாக, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும்.
நமது சக இந்தியர்களை குறிவைத்து, துன்புறுத் தவும், ஒடுக்கவும் செய்யும் பாஜகவின் முறையான சதியை எதிர்த்துப் போராடத் தீர்மானித்துள்ளோம். வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்தி இந்திய அரசமைப்புச் சட்ட உரிமைகள் மற்றும் சுதந் திரம் பறிக்கப்பட்டு வருகிறது. இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளான சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் மற்றும் நீதி – அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தை சிதைக்கிறது. இந்திய வரலாற்றை புதுப்பிக்கப்போவதாக பாஜக தொடர்ந்து கூறிவருவது சமூக நல்லிணக்கத்தை அவமதிக்கும் செயலாகும்.
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கும் திட்டத்துடன் மாற்று அரசியலை வழங்க நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எதிர்க்கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்தைக் காப் பாற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். மொத்தம் 26 கட்சிகள் ஒன்றிணைந்து ‘மிழிஞிமிகி’ கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மெகா கூட்டணியை வழிநடத்த 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து மும்பை கூட்டத்தில் முடிவு செய்யப்படும். விரைவில் மும்பையில் கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் அடுத்தாண்டு தேர்தலில் தோல்வி நிச்சயம் என மோடி அச்சம் அடைந்துள்ளார். எனவே அனைத்து அமைப்புகளையும் எதிர்க்கட்சிகள் மீது மத்திய பாஜக ஆயுதமாக ஏவுகிறது” எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் கூட்டம் இந்தியச் சித்தாந் தத்தைக் காக்கும் போராட்டம் : ராகுல் காந்தி: எதிர்க்கட்சிகளின் கூட்டம் இந்தியாவின் சித்தாந் தத்தைக் காக்கும் போராட்டம் என ராகுல் காந்தி பாராட்டி உள்ளார். வரும் 2024ஆ-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதன்முறையாக நடைபெற்றது.
கூட்டத்தில் 16 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளின் 2ஆ-வது கூட்டம் பெங்களூருவில் இரு நாள்கள் நடைபெற்றன. நேற்று (18.7.2023) இந்த கூட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து, அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ”இந்த போராட்டம் 2 அரசியல் கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல, இது இந்தியாவின் சித்தாந்தத்தைப் பாதுகாக்கும் போராட்டம் ஆகும். வரலாற்றில், இந்தியாவின் கருத்தை யாராலும் எதிர்த்துப் போராட முடிந்த தில்லை என்பதை நாம் அறியலாம், இது இந்தியாவின் சித்தாந்தத்திற்கும், மோடிக்கும் இடையிலான யுத்தம்” என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா: – எல்லா விஷயங்களையும் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள் ளார். இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் நன்றாக நடந்து முடிந்துள்ளது. இது பயனுள்ளதாக அமைந்தது. இன்று முதல் தான் உண்மையான சவால் தொடங்குகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியால் இந்தியா கூட்டணியை எதிர்கொள்ள முடியுமா?. நாங்கள் திட்டங்களில் கவனம் செலுத்துவோம். நாட்டை காப்பது, இந்தியாவை காப்பது தான் எங்களின் முதன்மையான நோக்கம். ஜனநாயகத்தை விற்பனை செய்ய பா.ஜனதா சதி செய்கிறது.வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். மும்பையில் நடைபெறும் கூட்டத்தில் தொகுதி பங்கீடு, ஒருங்கிணைப்பு குழு, துணைக் குழுக்கள், குறைந்த பொது செயல் திட்டம் போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். நாங்கள் தாய்நாட்டை நேசிக்கி றோம். அனைத்து தரப்பு மக்களுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். இந்தியாவை காக்க நாங்கள் அனைவரும் ஒன்று பட்டுள்ளோம். இதில் நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு மம்தா கூறினார்.
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் :
“பா.ஜனதா ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், தொழில் செய்வோர், ஏழைகள், நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் துயரத்தில் உள்ளனர். இந்தியாவில் ஜனநாயகம், மக்கள் நலனை காக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளோம். இதில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்றார்.
மராட்டிய மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே : “மக்களுக்கு நம்பிக்கை அளிக் கும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை அளிக்கிறோம். சர்வாதிகாரத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியில் வெற்றி பெறுவோம்” என்றார்.