கன்னியாகுமரி, ஜன. 10- கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக இயக்க நூல்கள் அறிமுக விழா நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது நிகழ்சிக்கு கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து நூல்களை அறிமுகம் செய்ய, திமுக தொழிற்சங்க நிர்வாகி திருவிதாங்கோடு சுகுமாறன் பெற்றுக்கொண்டார்.
கழக பொதுக்குழு உறுப்பினர் மா. மணி மாவட்ட கழக துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, கழக கலை இலக்கிய அணி மாவட்ட செயலாளர் பா.பொன்னுராசன், மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி, ஒன்றிய செயலா ளர்கள் மா.ஆறுமுகம், தமிழ் அரசன், மகளிரணி தலைவர் சு.இந்திராமணி மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன், கன்னியாகுமரி கிளைக்கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், கழகத் தோழர்கள் ச.ச.மணிமேகலை,எ.ச.காந்தி, டாக்டர் கலைச் செல்வன் ம.செல்வராசு, பாலகிருஷ்னன், அரிஷ், உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்