டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பல்கலைக்கழகங்களை அபகரிக்க ஒன்றிய அரசு திட்டம் – யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் மாநில அரசின் உரிமையை யு.ஜி.சி. நிராகரிக்க முடியாது என்கிறது தலையங்க செய்தி.
* பெண் கல்விக்கு செலவிடுதல் பெற்றோரின் சட்டப் படியான கடமை, உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்ய 8.1.2025இல் அமைக்கப்பட்ட கூட்டு நாடாளுமன்றக் குழுவின் முதல் கூட்டத்தின் போது பாஜகவின் கூட்டணி கட்சியான ஜே.டி.யு மற்றும் எதிர்க்கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியக்கூறு மற்றும் செயல்படுத்துதல் குறித்து
சரமாரி கேள்வி
*எஸ்.சி. பிரிவினரில் கிரிமிலேயரை இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும், நீதிபதி ஏ.ஆர்.கவாய், ஏ.ஜி. மாசிக் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கருத்து.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாடு முழுவதும் உள்ள விடுதிகளில் உள்ள 7,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சத்தான உணவை வழங்க மய்யப்படுத்தப்பட்ட சமையல றைகள், ஆதிதிராவிடர் நலத் துறை முடிவு.
தி இந்து:
* இந்து சமய அறநிலையத் துறை பெயரை தமிழ்நாடு அறநிலையத்துறை என மாற்றுக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை அரசுக்கு வேண்டுகோள்.
தி டெலிகிராப்:
* அமெரிக்காவில் சுதந்திரமான குற்றவியல் நீதி உள்ளது: அதானிக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து எரிக் கார்செட்டி
* இந்தியாவின் ஜிஎஸ்டி முறை ”உலகிலேயே ‘மோச மானது’; இது வரி பயங்கரவாதம் என காங்கிரஸ் கண்டனம்.
– குடந்தை கருணா