கரோனாவுடன் எச்எம்பிவி வைரஸை ஒப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் சமூக வலைதளங்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கரோனா மிக ஆபத்தானது, அதிக எண்ணிக்கையிலான இறப்பு விகிதம் கொண்டது. அதோடு ஒப்பிடுகையில், எச்எம்பிவி வைரஸால் இறப்பு அரிதாகவே ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.