9.1.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* புதிய முதலீடுகள், வேலைவாய்ப்பு அதிகரிப்பு, ஊதிய உயர்வு இவை மூலமாக பண சுழற்சியை அதிகரிக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே லாபம் பெறுவதால் நாட்டுக்கு ஒரு நன்மையும் கிடையாது என்கிறது தலையங்க செய்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* சிறுபான்மையினர் குறித்து அவதூறாக பேசிய அலகாபாத் நீதிபதி சேகர் யாதவ் குறித்து அலகாபாத் தலைமை நீதிபதியிடம் அறிக்கை கேட்டுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா.
* ‘16 லட்சம் கூடுதல் வாக்காளர்கள்’: மகாராட்டிராவில் தகுதியான வாக்காளர்களை விட தேர்தல் ஆணையம் அதிகமான வாக்காளர்களை சேர்த்துள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* மெய்தி சமூகத்தின் எஸ்டி அந்தஸ்து கோரிக்கையே இன மோதலுக்கான ‘காரணம்’ என்று மணிப்பூர் முதலமைச்சர் திசை திருப்பல் நாடகம்.
தி டெலிகிராப்
* பல்கலைக்கழக மானியக் குழு (UGC) முன்மொழியப் பட்ட புதிய விதிமுறைகள் அங்கீகரிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெறாமலேயே ஒருவர் விரைவில் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஆசிரியராக தகுதி பெறலாம்.
டைம்ஸ் ஆப் இந்தியா
* தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவின் உச்ச நீதிமன்றம் வகுத்த அமைப்பை மாற்றியமைத்த 2023 சட்டத்தின் செல்லுபடியை ஆராய்வது, தேர்வு கட்டமைப்பில் சட்டம் இயற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கும் அரசமைப்பு நீதிமன்றமாக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கும் இடையிலான போட்டியாக மாறும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து.
– குடந்தை கருணா