சென்னை, ஜன.9 நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊரக உள் ளாட்சிகளை இணைப்பது குறித்து கருத்து தெரிவிக்க 120 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால் முதலமைச்சர் கவனத் துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப் பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
கிராம ஊராட்சி
சட்டப்பேரவையில் நேற்று (8.1.2025) கேள்வி நேரத்தின்போது, அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், ”கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகள், நகராட் சிகள், மாநகராட்சிகளை இணைக்கும் திட்டத்தில், நலத்திட்டங்கள் கிடைக்காது என்ற அடிப் படையில் கிராமங்களே ஒன்று திரண்டு அரசுக்கு மனுக்களை தருகின்றனர். இதை நிறுத்தி வைக்க முதலமைச்சருடன் கலந்து பேசி நல்ல தீர்வை அமைச்சர் காண வேண்டும்” என்றார்.
இதற்கு, பதில்அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: ”தமிழ் நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இதில், மாநகராட்சி, நகராட் சிகளுடன் இணைப்பது, பேரூராட்சிகளாக உருவாக்குவது என்பது வெறும் 371 ஊராட்சிகள் மட்டும்தான். அதில் கூட, 120 நாட்கள் நேரம் அளிக்கப்பட்டுள்ளது. பிரச்சினை இருந்தால் அதை மாவட்ட ஆட்சி யரிடம் கூறி, அவர்கள் மூலம் அரசுக்கு அனுப்பினால், எந்த ஊரை சேர்க்கலாம், கூடாது என்பதை முடிவெடுக்கலாம். எந்த பகுதியிலும், மாநக ராட்சியுடன் இணைப்ப தற்கு பிரச்சினை செய்வ தில்லை.
புதிய பேரூராட்சி தொடங்கப்பட்டால், 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் என்பதால் எதிர்க்கப்படுகிறது. பல ஊராட்சிகளில் விளைநிலங்கள் இல்லாத இடங்களை மட்டுமே நகராட்சியுடன் இணைக் கிறோம். குறிப்பாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக் கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்ட பின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 371 ஊராட் சிகள் மட்டுமே இணைக் கப்படுகிறது. அதிலும் விருப்பமில்லை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், மீண்டும் பரிசீலிக்கப்பட்டு முதல மைச்சரிடம் கலந்து பேசி தக்க முடிவெடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.