நாகர்கோவில், நவ. 16- நாகா்கோவிலில் 14.11.2024 அன்று நடைபெற்ற அனைத்திந்திய 71ஆவது கூட்டுறவு வார விழாவில் 6 ஆயிரத்து 783 பயனாளிகளுக்கு ரூ.53.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நிதி மற்றும் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம்தென்னரசு வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவுத் துறை சார் பில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இவ் விழாவுக்கு ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம், சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். அமைச்சா் தங்கம்தென்னரசு பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் மற்றும், 6 ஆயிரத்து 783 பயனாளிகளுக்கு ரூ.53.69 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 203 கூட்டுறவு சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு
பயிர்கடன், மத்தியகாலக்கடன், நகைகடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடன், வீட்டுக்கடன், மகளிர்தொழில்முனைவோர்கடன், தானியஈட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபா் கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 லட்சத்து 57 ஆயிரத்து 962 பயனாளிகளுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
ஓவியம், சிற்பத் துறையில் பரிசு பெற கலையாசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ.16– ஓவியம், சிற்பத் துறையில் சிறந்த கலையாசிரியர்கள், சிறந்த கலைநூல்களை பதிப்பித்த நூலாசிரியர்கள் பரிசுத் தொகை, பாராட்டு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். 2024-2025ஆம் நிதியாண்டில், ஓவிய, சிற்ப கலைத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 10 கலையாசிரியர்களுக்கு தலா ரூ.10,000 வீதமும், ஓவியம், சிற்பக் கலைப்பிரிவில் சிறந்த கலை நூல்களை பதிப்பித்த 10 கலை நூல் ஆசிரியர்களுக்கு ரூ.10,000 வீதமும் பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் கலை பண்பாட்டுத்துறையால் வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஓவிய, சிற்பக்கலை ஆசிரியர்கள் தங்களின் தன்விவர குறிப்புடன், இது வரை பெற்ற சான்றிதழ்கள், பதிப்பித்த நூல் 2 பிரதிகள் உள்ளிட்ட விவரங்கள்) விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க வேண்டும். தேர்வுக் குழு மூலம் சிறந்த கலையாசிரி யர்கள் மற்றும் சிறந்த கலை நூலாசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை, இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு 6.12.2024க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.