சென்னை, நவ. 16- ஒன்பது தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படுகின்றது. வாழும் தமிழறிஞர்களான முனைவர் ஆறு.அழகப்பனின் அனைத்துப் படைப்புகளையும் (16 நூல்கள்) நாட்டுடைமையாக்கி ரூ,10 லட்சத்திற்கான காசோலையும், முனைவர் ராமலிங்கத்தின் அனைத்துப் படைப்புகளையும் (27 நூல்கள்) நாட்டுடைமையாக்கி ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், மறைந்த தமிழறிஞர்களான முனைவர் சோ.சத்தியசீலனின் அனைத்துப் படைப்புகளையும் (16 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான தனபாக்கியம் சத்தியசீலனுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், மா.ரா. அரசுவின் அனைத்துப் படைப்புகளையும் (7 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான திரிபுரசுந்தரிக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாவலர் ச.பாலசுந்தரம் அனைத்துப் படைப்புகளையும் (29 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையர்களான மதிவாணன், பா.தமிழ்மணி ஆகிய இருவருக்கும் சேர்த்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், க.ப.அறவாணனின் அனைத்துப் படைப்புகளையும் (136 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான தாயம்மாள் அறவாணனுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், திருநாவுக்கரசுவின் அனைத்துப் படைப்புகளையும் (34 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையர்களான அம்பலவாணன், அவ்வை, பூங்கோதை ஆகிய மூவருக்கும் சேர்த்து ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், முனைவர் இரா.குமரவேலனின் அனைத்துப் படைப்புகளையும் (8 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான தமிழரசி குமரவேலனுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், கவிஞர் கா.வேழவேந்தன் அனைத்துப் படைப்புகளையும் (16 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான பானுமதி வேழவேந்தனுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையும் என மொத்தம் ரூ.90 லட்சத்திற்கான காசோலைகளை வரும் 18ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்குகிறார்.
9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ரூ.90 லட்சம் காசோலை: 18ஆம் தேதி அமைச்சர் வழங்குகிறார்
Leave a comment