அரியலூர், நவ.16 தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்‘ ஆட்சி தொழில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அரியலூா் கொல்லாபுரத்தில் நேற்று (15.11.2024) நடைபெற்ற அரசு விழாவில், அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணி களை திறந்துவைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அவா் பேசியதாவது:
அரியலூா் ஆற்றல் மிக்க மாவட்டமாகவும், பெரம்பலூா் பெரும்பலம் கொண்ட மாவட்டமாகவும் அமைய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.அதனடிப்படையில்தான் அரியலூா் மாவட்டத்தில் முடிவுற்ற 51 பணிகளைத் திறந்து வைத்துள்ளேன். 26 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 10 ஆயிரத்து 141 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.பெரம்பலூா் மாவட்டத்தில் முடிவுற்ற, 456 பணிகளைத் திறந்துவைத்துள்ளேன். 27 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 11 ஆயிரத்து 721 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. மொத்தமாகச் சொன்னால், ரூ. 173 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஓய்வெடுக்கச் செல்பவன்
நான் இல்லை!
மக்களுக்கான திட்டங்களை அறிவித்தோம், நிதி ஒதுக்கினோம், அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று ஓய்வெடுக்கச் செல்பவன் நான் இல்லை. கடந்த காலத்தில் அதுபோல் ஒரு சிலா் இருந்தார்கள்.
நான் பிரச்சினைகளை நோ்கொண்டு நிற்கிறேன். அந்தப் பிரச்சினையைத் தீா்க்கிறேன். மக்களுக்காக பார்த்துப் பார்த்து திட்டங்கள் தீட்டுகிறேன். திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என்று கள ஆய்வு செய்கிறேன். சொன்னால் – சொன்ன நாள்களுக்குள் திட்டங்களைத் திறந்து வைக்கிறேன். அதனால்தான், இந்த ஸ்டாலின் எங்கு சென்றாலும் மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு கலக்கம்
தங்கள் குறைகளை போக்குவார் என்ற நம்பிக்கை யோடு, மக்கள் தேடி வந்து மனுக்களை கொடுக்கிறார்கள். தமிழ்நாடு மக்கள் என்மீதும், திமுகமீதும் வைத்திருக்கும் நம்பிக்கையும், அளவில்லாமல் பொழியும் அன்பும் எதிர்க்கட்சித் தலைவா் பழனிசாமிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கே, மக்கள் தன்னை மறந்துவிடுவார்களோ என்று நினைத்து நாள்தோறும் ஊடகங்கள் முன்பு தன்னுடைய பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டு இருக்கிறார்.
அம்பலப்பட்டுப் போகும்!
2011-2021 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் சிறந்த ஆட்சியை அதிமுக தந்ததாகவும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 4 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி செய்ததாகவும் சிரிக்காமல் பேட்டி கொடுத்திருக்கிறார் பழனிசாமி. பொய்க்கு ‘மேக்க’ப் போட்டால் அது உண்மையாகிவிடாது. இன்னும் பளிச்சென்று அம்பலப்பட்டு போகும்.
அதிமுக ஆட்சியில் நடத்திய முத லீட்டாளா் மாநாடு மூலமாக எவ்வளவு முதலீடுகள் வந்தது?. இதனால், வேலைவாய்ப்பு பெற்றவா்கள் எத்தனை போ்? இதையெல்லாம் புள்ளிவிவரத்துடன் பழனிசாமியால் சொல்ல முடியுமா?. வந்தவா்களையும் விரட்டி விட்டார்கள். ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் திரும்ப அவா்களை அழைத்துக் கொண்டுவந்து தமிழ்நாட்டில் தொழில் மறுமலா்ச்சியை இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
வளமான-நலமான தமிழ்நாடு
கடந்த 3 ஆண்டுகளில், 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈா்த்திருக்கிறோம். புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுகிறோம். உடனடியாக அவா்களைத் தொழில் தொடங்க அனைத்துவித முயற்சிகளும் எடுத்துக்கொண்டு இருக்கிறோம். நானே பல திறப்பு விழாக்களுக்குச் சென்று திறந்து வைத்துவிட்டு வருகிறேன். இதுதான் நல்லாட்சியின் அடையாளம்.இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க ‘திராவிட மாடல்‘ அரசு பாடுபடுகிறது. அந்த வளா்ச்சியை உறுதி செய்யத்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு செய்கிறோம்.
‘‘ஊட்டச்சத்தை உறுதி‘‘ செய் திட்டம்!
கடந்த 21.5.2022 அன்று நீலகிரி மாவட்டத்தில் ‘‘ஊட்டச்சத்தை உறுதிசெய்‘‘ திட்டத்தை தொடங்கி வைத்தேன். 76 ஆயிரத்து 705 ஊட்டச்சத்து குறைபாடுள்ள 6 மாதத்துக்குட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வீட்டிற்கே கொண்டுசென்று கொடுத்தோம். தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகள் என்று அடையாளம் காணப்பட்ட 77.3 விழுக்காடு குழந்தைகள் இயல்பு நிலை மைக்குத் திரும்பி இருக்கிறார்கள்.
இதன் அடுத்தகட்டமாகத் தான், இன்றைக்கு ரூ.22 கோடி மதிப்பீட்டில் வாரணவாசி குழந்தைகள் மய்யத்தில் 2 ஆவது கட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். எதிர்காலத்திலும் தொடரப்போகும், இந்தத் திட்டங்க ளால், வரலாற்றில் திராவிட மாடல் அரசும், அதை வழிநடத்தும் இந்த ஸ்டாலின் பெயரும் அழிக்க முடி யாதபடி என்றென்றும் நிலைத்திருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.