லட்டூர், நவ.15 மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை முன்வைக்க வில்லை. நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சமமாக பயனடைய வேண்டும் என்ற நோக்கில்தான் இக்கோரிக்கையை காங்கிரஸ் வலியுறுத்துகிறது என்று அக்கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தல் தொடங்கி அனைத்து தோ் தல்களிலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை காங்கிரஸ் முக்கிய தோ்தல் வாக்குறுதியாக அறிவித்து வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்துவரும் பாஜக, மக்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தும் நோக்கில்தான் காங்கிரஸ் ஜாதிவாரி கணக்கெடுப்பை பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், மகாராட்டிர மாநிலம், லட்டூரில் 13.11.2024 அன்று தோ்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காா்கே இது குறித்துப் பேசியதாவது:
பாஜகவினரோ அதன் கொள்கைகளை உருவாக்கிய வா்களோ அல்லது ஆா்.எஸ்.எஸ். அமைப்போ சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற் றதே இல்லை. நாட்டின் ஒற் றுமைக்காகவும் அவா்கள் பாடு பட்டதில்லை. ஆனால் இப்போது மகாராட்டிர தோ்தல் பிரச்சாரத்தில் ‘நாம் பிளவுபட்டால் அழிக்கப் படுவோம், ‘ஒற்றுமையே பாது காப்பு’ என்ற முழக்கங்களை பாஜக தலைவா்கள் பொய்யாக எழுப்பி வருகின்றனா். உண்மை யில் பாஜகவினா்தான் பிளவு சக்திகள்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மகாராட் டிரத்திலும் காங்கிரஸ் வாக் குறுதி அளித்துள்ளது. இது அனைத்து தரப்பு மக்களும் சமமாக பயனடைய வேண்டும் என்பதற்காகவும், ஒற்றுமையை மேம்படுத்துவதற்காகவுமே காங்கிரஸ் வலியுறுத்தி வரு கிறது. ஜாதிவாரிக் கணக் கெடுப்பு என்பது மக்களை பிளவு படுத்துவதற்காக அல்ல.
இந்தியாவின் 62 சதவீத செல்வ வளம் நாட்டு மக்களில் 5 சதவீதம் பேரிடம் மட்டுமே குவிந்துள்ளது. நாட்டின் 50 சதவீத ஏழைகளிடம் நாட்டின் வளத்தில் 3 சதவீதம் மட்டுமே உள்ளது. விவசாயிகள் தற்கொலை மகாராட்டிரத்தில்தான் அதிகம் நிகழ்கிறது. ஒன்றிய, மாநில பாஜக கூட்டணி அரசுகள் இந்த விடயத்தில் என்ன நடவடிக்கை எடுத்தன.
ராகுல் பொதுக் கூட்டங்களில் பயன்படுத்தும் அரசமைப்புச் சட்ட புத்தகம் சிவப்பு நிறத்தில் இருப்பது நகா்ப்புற நக்ஸல்களின் அடையாளம் என்று பிரதமா் மோடி பேசுகிறாா். முன்பு குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்துக்கு இதே சிவப்பு நிற அரசமைப்புச் சட்ட நூலைத்தான் பிரதமா் மோடி பரிசளித்தாா். எனவே, அவரையும் நகா்ப்புற நக்ஸல் எனக் கூறலாமா? என்று கேள்வி எழுப்பினாா்.