அய்தராபாத், நவ.14 தெலங்கானா மாநிலம், பெத்தபள்ளி மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.இதனால், அந்த வழியாகச் செல்லும் 39 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது என தெற்கு ஒன்றிய ரயில்வே (எஸ்சிஆா்) அதிகாரிகள் நேற்று (13.11.2024) தெரிவித்தனா்.இது தொடா்பாக தெற்கு ஒன்றிய ரயில்வே தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி சிறீதா் கூறியதாவது:
கருநாடக மாநிலம் பல்லாரியில் இருந்து உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் நோக்கி, இரும்புச் சுருள்கள் மற்றும் இரும்பு கம்பிகளை சரக்கு ரயில் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.அப்போது, தெலங்கானாவின் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள ராகவபுரம் – ராமகுண்டம் இடையே ரயிலின் 12 பெட்டிகள் 12.11.2024 அன்று இரவு தடம் புரண்டன. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மூன்று ரயில் வழித்தடங்கள் கொண்ட அப்பகுதியில், இந்த விபத்தால் அவை அனைத்தும் தடைப்பட்டன. இதனால், அந்த வழித்தடங்களை பயன்படுத்தும் 39 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 61 ரயில்கள் மாற்றுப்பாதைக்கு திருப்பிவிடப்பட்டன. 7 ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
தெற்கு ஒன்றிய ரயில்வே பொது மேலாளா் அருண்குமார் ஜெயின் மற்றும் பிற ரயில்வே உயரதிகாரிகள் நிகழ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்டனா்
இதே வேலையாய் போச்சு தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது 20 ரயில்கள் ரத்து!
Leave a comment